வழிமீதில் விழிவைப்பேன்

விதியேயுன் விளையாட்டில் மிதிபட்டுக் கிடக்கின்றேன்
கொதிக்கின்ற உலைபோலக் கொந்தளித்துத் தவிக்கின்றேன்
சதிசெய்த அந்தகனால் தடுமாறி நிற்கின்றேன்
கதியின்றி மதியிழந்து கவலையிலே உழல்கின்றேன் !

முதிராத முத்தொன்றை முழுதாக இழந்துவிட்டேன்
புதிராக இருப்பதனால் புரியாமல் புலம்புகின்றேன்
உதிர்ந்தாலும் என்றென்றும் உள்ளத்தில் சுமந்திருப்பேன்
எதிர்பார்த்து வழிமீதில் எந்நாளும் விழிவைப்பேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Aug-16, 12:34 am)
பார்வை : 57

மேலே