தினம் ஒரு பாட்டு இயற்கை - 32 = 202
“பவுர்ணமியே ! பவுர்ணமியே !
பரிணமித்தாய் இன்றிரவே..
(பவனி வாராய் வான் வீதியிலே)
இரவில் பார்த்தேன் பெரிதாக
பகலில் ஏனானாய் சிறிதாக ?”
யார் செய்த மந்திரமோ
இந்திரன் செய்யும் தந்திரமோ
நீ என்ன எந்திரமோ
தேய்கின்றாய் தினம் தினம்
மேகம் உனை மூடையில்
மோகம் கொள்வாயோ
தாகம் எடுக்கையில்
மேக நீரை குடிப்பாயோ
அடர்ந்த இரவினிலே
அசைந்துவரும் முழு நிலவே
உன் வருகையில் சலனமில்லை
இதுதான் அமைதிக்கு மறுபெயரோ?
ஆம்ஸ்ட்ராங்கின் அறிவிப்பால்
உன் அந்தரங்கம் வெளியானது
ஆக்ஸிஜன் இல்லாமல்
நீ உயிர்வாழ்வது ஆபூர்வமானது
காற்றில்லாமல் வாழ்கின்ற
மைய்யிருள் வான்தேவதையே..!
போற்றுகின்றேன் புகழ்கின்றேன்
காரிருள் கிழித்து வா வெளியே..!
சூரியனின் துணைவியே
பூமியின் மருமகளே
வானமகள் வார்த்தெடுத்த
வெண் மதியே வருகவே !
கவிகளின் கற்பனைக்கு
ஊக்கம் தரும் உத்தமியே
நீ வாழ்க ! வாழ்கவே !
தினம் வருக! வருகவே!