என் அன்புச் சகோதரி

தெய்வம் தந்த
சகோதரி இவள்
நான் வளர
தீபமாய் எறிந்த
திரி இவள் ....!!

ஓர் தாய் வயிற்றில்
பிறக்காவிடிலும்
தாய் உணர்வுடன்
பிறந்து என்னை காப்பவள்..

சின்னஞ்சிறு வயதில்
எனக்கு சோறுஊட்டியதும்
உண்ணாமல் நான் அடம்பிடிக்க
தன் பசியையும் மறந்து
கை சோற்று பருக்கை காய்ந்து
என் பின்னால் ஓடிவந்து
பசி ஆற்றியதும்...
அவள் மடியில் என்னை
உறங்க வைக்க அவள்
தூக்கம் துறந்ததும்..
கதை பல சொல்லி
என்னை சிரிக்கவைத்ததும்
மரணம் வரை மறவேன் சகோதிரியே ...

அவள் கண்டிடாத துன்பம் இல்லை !!
இருந்தும் அதை அவள்
என்றும் வெளி காட்டியதும் இல்லை !!
அவளின் நிலை கண்டு
இறைவனை நான் வெறுத்ததும் உண்டு
தோல்வி நான் பல கண்ட பொழுதும்
துன்பத்தால் நான் துவண்ட பொழுதும்
அக்கா அவளின் ஒரு நினைவு போதும்
என்னுள் தெம்பு கோடி சேரும் ..!!

வார்த்தைகளை தேடி
கோர்த்தவைகள் அல்ல
இவ்வரிகள் -உன்மீது
கொண்ட பாசத்தால்
சேர்ந்த உணர்வின் பிம்பங்கள்

இனி வரும் நாட்கள்
உனக்கு நிம்மதியை,மகிழ்ச்சியை
அள்ளித்தரும் என்பதில்
துளி ஐயம் இல்லை ..
அதற்க்கு துணையாய் நீ
பெற்ற இரண்டு முத்துக்களும்
அன்பாகிய எனது சொத்தும்
நிழலாய் உன்னைத்தொடரும்
என்பதில் மறுப்பு இல்லை

என்றும்....என்றென்றும் ....
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (24-Aug-16, 6:29 pm)
பார்வை : 155

மேலே