இனிது இனிது
இல்லறத்தில் இணையும்
இதயங்கள் இன்பமுற
இல்லமும் இனித்திட
இம்மியளவும் இடையூரன்றி
இதயங்கள் இணைந்தால்
இன்னல்கள் இல்லாமல்
இணைந்திடும் இமைகளாய்
இடைவெளியே இல்லாத
இதயங்களாய் இருந்தால்
இளமையும் இறவாது
இன்பநிலை இறங்காது
இறுதிவரை இவ்வுலகும்
இனிதே .....!
பழனி குமார்

