குழந்தையின் மடியில் மரணம்

தனிமையும் என்னை
சிறையடைக்கும் முன்பே
பலவருட துன்பத்தை கொன்றே
என் இன்பத்தை உயிர்ப்பித்தாயே
உன்தன் பிறப்பினிலே

பல பண மெத்தை இருக்கையிலே
எந்தன் மடி மெத்தை போதும் என்றே
உன்னை வைத்தே
என் முத்தங்கள் மொத்தத்தையும்
குவித்தேனே கண்ணே
உன்தன் குழி கன்னத்திலே

நீ அழுகின்ற சத்தம்தான்
என் காதில் கேட்கும் முன்பே
பால் சுரக்க வைத்தே - நான்
உன்னிடம் மார்பகம் நீட்டுவேனே
பக்கத்து தெருவினிலே
குப்பை தொட்டி அலசியே

காடோ மலையோ
நான் போகும் இடமெல்லாம்
நீயும் அறிவாய் கண்ணே
என் கைகள் உன்னை ஏந்திச் செல்ல
குளிர்களும் உன்னை சூழா
நான் தாங்கி கொள்வேன்
என் முந்தானை உன்னை
பொன்னாடை போற்றியே

காற்றினில் கலந்தே புழுதிகளும்
உன் கண்ணில் சென்றால்
என் விழிகளும் கண்ணீர் வடிக்குமே
என் உயிரும் எங்கே என்றால்
உன் இதயம் தொடுவேன் கண்ணே
என் பக்கம் வெற்றி இருக்கையிலே
உந்தன்
பக்கம் சாடி வருவேன்
நீயும் உலகில் வென்றே சிகரம் தொட

என்னை விட்டே ஓர் நொடி
நீயும் தள்ளி போனால்
எந்தன் பார்வையும் மறுத்ததில்லை
உன்னை தொடர
என் வியர்வை துளிகளிலே
உன்னை கடலாய் மாற்றினேன்
நீயும் நீண்டு செல்லும் தூரம் கண்டே
வெட்டிக் கொண்ட தொப்பில் கொடியை
ஒட்டிக் கொள்ள நினைக்கிறேன்
நீயும் எந்தன் அருகில் இருக்கையிலே
உன்தன் மடியில் என் உயிரும் பிரிய

எழுதியவர் : பயாஸ் அஹமட் (25-Aug-16, 8:07 pm)
பார்வை : 55

மேலே