மெளனத்தின் மொழிபெயர்ப்பு---முஹம்மத் ஸர்பான்

அழகான கவிதைகள் பொய் சொல்வது அதிகம்
உன் மெளனங்களின் வார்த்தைகள் போல்
அழகான பூக்கள் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை
-------என் கனவுகளின் ஆனந்தத்தை போல்

மேகங்கள் மாறலாம் ஆனால் வானம் மாறுவதில்லை
உன் புன்னகையில் என் கண்கள் கலங்குவதை போல
நிலவும் எரியும் விண்மீன் கூட்டமும் சுடரும்
என் உறங்கா விழிகள் உன்னை தாலாட்டுதல் போல

முள்ளின் தண்டிலும் கொஞ்சம் ஈரமாய் பால் வடிவதுண்டு
உன் பார்வைகள் பாவமென்று என்னை தேடுதல் போல்
கானல் நீரின் தாகம் முடிவில்லா தொடர்கதை தான்
என் இதயம் எனக்காய் இறந்து உனக்காய் துடிப்பது போல்

சாக்கடலின் அலைகளும் நயாகராவில் தஞ்சம் கொள்ளலாம்
உன் பாதம் பட்ட மண்ணில் நான் ரோஜாக்கள் நடுதல் போல
காஷ்மீரின் ஆப்பிள் தோட்டமும் தோட்டாக்கள் விதைக்கலாம்
என் இசை உலகில் இழை அருந்த வயலின் பாடுதல் போல

கண்ணீரும் கள்ளிப்பாலும் கலந்தால் விஷமின்றி தேனாகலாம்
உன் கோரமான நகத்தால் கனவில் யுத்தம் செய்வதை போல்
நேற்றும் இன்றும் வாழ்க்கைப் பையில் தஞ்சம் கொள்பவை
என் இமைகளை பிய்த்து மயிலிறகிற்கு சாயம் பூசுதல் போல்

பாலைவனத்திலும் பால்மழை பொழியக் கூடும் உன்
நினைவுகளில் என்னை ஆசை முட்கள் குத்துதல் போல அடர்ந்த
காட்டில் சிங்கக் கூட்டத்திடம் கவரிமான்கள் சிக்கி கொள்ளும்
என் வார்த்தைகளின் மெளனத்தை மொழிபெயர்ப்பதை போல

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-Aug-16, 11:02 am)
பார்வை : 494

மேலே