முதல் முத்தம்

உன்னுள் எனை உருவாக்கி
உயிர் கொடுத்து
உன் குருதியை
உணவாய் அளித்து என்னை
உலகுக்கு அழைத்து வந்த
உன்னைப் பிரிந்ததால்
நான் வீரிட்டு அழ
எனை வாறி எடுத்து
அணைத்து நீ அளித்த
முதல் முத்தத்தில்
தொடங்கியது என் வாழ்கை

எழுதியவர் : கேசவன் (26-Aug-16, 10:16 pm)
சேர்த்தது : கேசவன்
Tanglish : muthal mutham
பார்வை : 236

மேலே