அழகுக்குறிப்புகள்

அழகுக்குறிப்புகள் ..

காதலியின்
முத்தங்களால்
முகம் கழுவுங்கள் ..

அவள்
இதழின் சாயங்களால்
சட்டை அணியுங்கள் ..

அவள்
விரல்களின்
இடுக்கினால்
தலைவாரிக்கொள்ளுங்கள் ..

அவள்
சூடிய பூக்களின்
வாசனையை வாங்கிக்கொள்ளுங்கள் ..

அலங்காரமே
உங்களை அழகு படுத்தியதின் விளைவு
கண்ணாடியை பாருங்கள்
பேரழகன் நீங்கள் ...

திருப்தி
இல்லையென்றால்
அவள்
விழி காணுங்கள்
அதில் தெரியும்
அவள் கைவண்ணங்கள்
நீங்கள் தான்
பிரபஞ்சத்தின் பேரழகன் ...

காலையும்
வந்துவிடும்
வெளியில் செல்லுங்கள்
தேவதைகள் உங்கள் தோட்டத்துப்
பூக்களை
காதல் தூது விடுவார்கள் ...

பூக்களை
சிறைப்பிடித்து
அவளின் கூந்தலுக்கு
பரிசளியுங்கள் ...

இப்போது
அவள் விழிகாணுங்கள்
மறுபடியும்
அவள் முதலிருந்து
ஆரம்பிப்பாள் ...

அப்புறமென்ன
கடைப்பிடித்து
பாருங்கள்
அவரவர்
காதலி
அவரவர் திருமதி ஆகும்போது ....

குறிப்பு :அவசரப்பட்டால் அழகுக்குறிப்பு பயன் தராது மாறாக
தர்ம அடியால் முகம் வீங்கும் ...


*மருதுபாண்டியன். க

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (28-Aug-16, 1:32 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 288

மேலே