அப்பெண் நடிகையில்லை மாதவத்தால் பெற்றயென் பேத்தி - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

திரிஷாவைப் பார்க்கவே வேண்டுமென்று தீராப்
பெரும்ஆவல் கொண்டுகாது குத்தின் – திருவிழாக்
கொண்டாட்டம் செய்கின்ற கொட்டகைக்கு நான்விரைந்து
கண்டுகொண்டேன் என்பேத்தி யை! 1

திரிஷாவைப் பார்க்கவே வேண்டுமென்று தீராப்
பெரும்ஆவல், பேராசை, அன்பின் – வரையற்ற
காதலுடன் சென்றுவந்தேன்; அப்பெண் நடிகையில்லை;
மாதவத்தால் பெற்றயென்பேத் தி! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Aug-16, 8:20 pm)
பார்வை : 53
மேலே