யக்கா யக்கா சின்னக்கா

யக்கா யக்கா சின்னக்கா
ஆக்கிட்டியா சோறு யக்கா
கொழம் பேதும் வச்சியாக்கா
இல்ல பழையது மட்டுமாக்கா

வாடி வாடி சின்னப்புள்ள‌
என்னப் பெத்த செல்லப்புள்ள‌
உங்கதைய சொல்லு புள்ள‌
இங்க பழசுதானே புள்ளே

மாடுகளக் கூட்டிக் கிட்டு
மேய்க்க மச்சான் போயிட்டாரு
ஆடுகள அவித்து விட்டு
ஒங்க வீடு வந்தேனக்கா

வெள்ள னையே எந்திருச்சு
மாமன் சீம போயிட்டாரு
உரமும் வெதையும் வாங்கிகிட்டு
சாயந்தரம் திரும்பு வாரு

எதிர் வீட்டு போதும்பொண்ணு
மேக்க வீட்டு ஆந்தக்கண்ணீ
எடுத்து வாடி ஊத்துத்தண்ணீ
சேந்து கதைப்போம் நம்பகதைய‌

ஊறுகா நான் எடுத்துவாரேன்
தொவையல் கொஞ்சம் அரச்சுவாரேன்
அவுகஎல்லாம் வார வர்ர‌
சிரிச்சுக் கெடப்போம் வாருங்கடி

சூரியனும் போயிட் டான்டி
சோறு இன்னும் திங்கலையே
பேச்ச நல்லா தின்னுப்புட்டோம்
பசிய மறந்து சிரிச்சுப்புட்டோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Aug-16, 7:35 am)
பார்வை : 48

மேலே