மீட்கத்தான் முடியவில்லை

ஏனோ தெரியவில்லை
அவள் இருக்கை
நோக்கி அலைபாயும்
கண்களை
என்னால் தடுக்கத்தான் முடியவில்லை .....

ஏராளம் ஆசைகள்
நாளுக்கு நாள்
அதிகமாகி
கொண்டே இருக்கிறது .....
அதை அடக்கத்தான்
முடியவில்லை ....

உன்னிடம்
பேச ஏதேதோ
காரணம் தேடுகிறேன்
ஒன்று கூட
கிடைக்கவில்லை .....

உன் முகம் பார்க்க
பார்க்க இன்னும்
அதிகமாய்
பிடித்து கொண்டே
இருக்கிறது .... நிறுத்த முடியவில்லை ....

உன் அழகில்
மயங்கிய என்னை
மீட்கத்தான்
முடியவில்லை .....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Sep-16, 7:02 pm)
பார்வை : 84

மேலே