BE CAREFUL

20 வருடங்களுக்கு முன்பு என் வீடு இருக்கும் தெரு வழியாக ஒரு சாக்கு முட்டையை சைக்கிளில் கட்டிக்கொண்டு ' உப்பு உப்பேய்! உப்பு உப்பேய்!' என சத்தம் போட்டுக்கொண்டு ஒருவர் போவார்.
உடனே அக்கம் பக்கத்திலிருப்போர் 1 ரூபாய், 2 ரூபாய்க்கு படி நிறைய உப்பு வாங்கிட்டு போவாங்க.
அதே காலகட்டத்தில் 'டாட்டா சால்ட், அன்னப்பூர்னா சால்ட்' என கார்ப்ரேட் கம்பெனிகள் உப்பு விற்க தொடங்கியவுடன் சைக்கிளில் உப்பு விற்கும் தொழிலாளி காணாமல் போனார்.
ஒரு ஏழை கூலி தொழிலாளியும் டாட்டா சால்ட்டை வாங்கத்தொடங்கினான்.
1 ரூபாய், 2 ரூபாய்க்கு கீரை வாங்க தள்ளுவண்டிக்காரனிடம் மல்லுக்கட்டியவர்கள் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' வந்ததும் அங்குபோய் கம்ப்பியூட்டர் பில் சரியாகத்தான் இருக்கும் என பேரம் பேசாமல் ஒரு கட்டு கீரையை 10 ரூபாய்க்கு வாங்கி வந்தார்கள்.
உப்பு, ஆலங்குச்சி,வேப்பங்குச்சியில் பல் விளக்கியவர்களை பார்த்து 'டூத் பேஸ்ட் இல்லையா?' என நக்கலடித்து தங்கள் பற்பசைகளை விற்ற நிறுவனங்கள் இன்று ' உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லையா' ' இது ஒரிஜினல் நீம் அடங்கிய டூத் பேஸ்ட்' என மாற்றி விளம்பரம் செய்கிறார்கள். அதையும் நாம் நம்புகிறோம்.
கடைசியாக பாயின்ட்டுக்கு வருகிறேன். நாம் என்ன சாப்பிட வேண்டும்? அதை எங்கு வாங்கவேண்டும்? எதை போட்டு பல் விளக்க வேண்டும் என நம் வாழ்வை ஒரு கோடு போட்டு அதன் பின்னாலேயே கொண்டுபோன கார்ப்ரேட் நிறுவனங்களின் சமீபத்திய கவர்ச்சி அழைப்புதான் 'JIO'
தற்போது சுகமாக இருக்கும்தான். ஆனால் அந்த சுகத்திற்கு பழகிய பிறகு மீள்வது கொஞ்சம் கஷ்டம்தான்..

'Be Careful'
நான் என்னைய சொன்னேன்!

எழுதியவர் : முகநூல் (3-Sep-16, 1:33 am)
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே