சாக்குசி

ஏண்டி வள்ளி சாக்குசி வெளையாடிட்டு இருக்கறாளா?
@@##
இல்லங்க அத்த அவ தூங்கிட்டு இருக்கறா.
@@@@@@
அடியே வள்ளி, உன்னத் தெரியாமதாங் கேக்கறேன். தமிழ்ல நல்ல பேருங்களே இல்லாத மாதிரி எம் பேத்திக்கு சாக்குசி -ன்னு பேரு வச்சிருக்கீங்களே அது சரியா?
@@#####
நா என்ன அத்த செய்யறது? உங்க மகன் பெரிய சினிமா வெறிபிடிச்சவரு. அனைத்து உலக கவர்ச்சிக் காதல் நாயகி ரம்கா ரசிகர் மன்றத்தின் தலைவரா இருக்கிறார். அவருதாம் "நம்ம பாப்பாவுக்கு இந்திப் பேரத்தான் வைப்பேன் . பாப்பாவுக்கு தமிழ்ப் பேர வைக்கச் சொல்லி தொந்தரவு பண்ணினா உன்னோட நாக்கப் பிடிச்சு அறுத்துடுவேன்"-என்ன மெரட்டிட்டு பாப்பாவுக்கு சாக்ஷி-ன்னு பேரு வச்சு நகராட்சிலே பதிவு பண்ணிட்டாருங்க.
#@####
சரி, சரி விடு வள்ளி. அவம் படிக்கற காலத்திலேயே உருப்படாத பொறுக்கிப் பசங்களோடு சேந்து திருட்டுச் சினிமா பாத்துட்டு 22 வயசுலதான் பத்தாம் வகுப்பில தேறி வந்தான். அடங்காத திரிஞ்சதாலதான் அவன் இப்ப ஏமாத்திப் பொழைக்கிற தரகர் வேல பாத்திட்டு இருக்கறான். உருப்படாத அவுனுக்குத் தாய் மொழி மேல பற்று வருமா? எம் பேத்திக்கு அந்த சாக்குசிங்கற பேரு வேண்டாண்டி வள்ளி. நாம அவள தங்கம்-ன்னே கூப்புடலாம்.
@####
சரிங்க அத்த. ஆனா உங்க மகன் கோவிச்சிட்டு கத்துனாருனா என்ன செய்யறது.
@###%
எம் மவன் வேலு வாலாட்டினா எங்கிட்டச் சொல்லு. அவனோட வால நறுக்கி நாலு வார்தை கேட்டா தலையை தொங்கப் போட்டு போயிடுவான். அவனோட சினிமா வெறியும் அடங்கிப்போயிடும்.
@##%%
நீங்க சொல்லறது சரி தான். அப்பிடியாவது உங்க பிள்ளையத் திருத்துங்க அத்த.

@@###ஃஃ௤௤௤௤௤ஃ௤௤௤௤@##########%##%#####
சிரிக்க அல்ல. சிந்திக்க, மொழிப்பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (3-Sep-16, 4:38 pm)
பார்வை : 168

மேலே