மழை - மகிழ்ச்சி

மழை - மகிழ்ச்சி!
-------------------
மழை
மண்ணுக்கு குளிர்ச்சி!

மண்ணில் உறங்கும்
விதைகளுக்கு எழுச்சி!

மரம், செடிகளுக்கு
புத்துணர்ச்சி!

அருவிகளுக்கு
நீர் வீழ்ச்சி!

ஆறுகளுக்கு
அது எழுச்சி!

குடை விற்பவனுக்கு
வியாபாரம்!

பள்ளி குழந்தைகளுக்கு
ஆரவாரம்!

காகித கப்பல் மழை நீரில்
மிதக்கும்!

சிறார்களுக்கோ
இன்பம் பெருக்கும்!

மழைத்துளி குளிர்ச்சி,
மொத்தத்தில் மழை மகிழ்ச்சி!

லி.முஹம்மது அலி

எழுதியவர் : லி.முஹம்மது அலி (3-Sep-16, 6:49 pm)
பார்வை : 167

மேலே