அன்னை தெரசா

அன்னை தெரசா...
அன்னை என்ற சொல்லுக்கு ஏற்ற பெண்ணானாய்...
அகிலமெங்கும் உன் பேர் தொனிக்கும் புனித மலரானாய்...
உயரிய எண்ணங்களால் பல விருதுகளை பெற்று உயர்ரந்த மங்கையானாய்...
தொழு நோயாளிகளை கூட அள்ளி அணைக்கும் பாசமிக்க செவிலியானாய்...
வாழ்க்கை பாடங்களை தத்துவங்களால் விளக்கி பேரறிவு மிக்க ஆசிரியரானாய்...
பரிசாய் கிடைத்ததையும் கூட ஏழைகளுக்கு கொடுத்து நிகரற்ற வள்ளலானாய்...
உன் பாத சுவடுகளை பற்றி நடக்கவே முயல்கிறேன்...
...முடியவில்லை...
மீண்டும் ஒருமுறை நீ பிறக்க வேண்டும் உன் பாதங்களை முத்தம் செய்ய...

எழுதியவர் : ரானா சிங் (6-Sep-16, 5:32 am)
Tanglish : annai therasa
பார்வை : 243

மேலே