எங்கிருந்தாலும் வாழ்க

மகனே உனைப் பெற்றவள்
பேசுகிறேன்.
கட்டுப்பாடு இல்லாதவனாய் வளர்ந்தாய்
தீய நண்பர்கள் உன்னை
பெற்றவர்க்கே எதிராகத் திருப்பதி விட்டனரே.

என்னை பலமுறை அடித்தாய்
அப்பாவையும் நீ விட்டு வைக்கவில்லை.

தகாத வார்த்தைகளைப் பேசுவது
உனக்கு மூச்சு விடுவதைப் போல.

நாலு பேர் மதிக்கும்படி வாழ்ந்தோம்
உன் தகாத செயல்களால்
எங்களுக்குத்தான் அவமானம்.


பத்தாண்டு வேலை பார்த்தும்
நீ பெருக்கியது உன் தொப்பையை மட்டும்.
குடி கூத்து கும்மாளத்திலேயே உன் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தது.

சேமித்து வைக்காத வாழ்க்கை
எங்கள் செலவிலேயே உனக்கு கல்யாணம்.

வெளியூர் பணி கிடைத்ததால் தப்பித்தோம்.
இனியாவது எங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.

அப்பாவுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில்
நாங்கள் இருவரும் வாழ்க்கையை ஓட்டிக்கொள்கிறோம்.

எங்கள் முகத்தில் நீ விழிக்காமல் இருந்தால் போதும்.
உனக்கேற்ற மனைவி கிடைத்துவிட்டாள்.

எங்கள் உடல்களை மருத்துக் கல்லூரிக்கு எழுதிக் கொடுத்து விட்டோம்.

இறுதிச் சடங்கும் இருக்காது
உனக்கு தகவல் தெரிந்தாலும்
எங்கள் உடல்களைப் பார்க்கவும் வரவேண்டாம்.

உனைப் பெற்ற நாங்கள் தான் பாவிகள்.

நரகத்தில் சந்திப்போம் வா!
காத்திருக்கிறோம்.

உன் தீய ஒழுக்கம் எவ்வழியில் செல்லுமோ.

அந்த ஈசனுக்காவது தெரியுமா?


எங்கிருந்தாலும் வாழ்க!

எழுதியவர் : பூந்தளிர் (7-Sep-16, 1:13 am)
சேர்த்தது : பூந்தளிர்
பார்வை : 220

மேலே