சத்சங்கமும் துவாரகாதீசனும்

சத்சங்கமும் துவாரகா மன்னனும்

பூலோகத்தில் முதன்முதலாக சத்சங்கம் ஏற்பாடு செய்தது பகவான்
துவாரகாதீசனே,
குருக்ஷேத்ர யுத்தம் முடிந்தபின் யாரல்லாம் இருப்பார்கள் யாரல்லாம் மடிவார்கள் என்று தெரியாது
அதற்கு முன் அனைவரையும் சந்திக்க செய்ய வேண்டும் என்றே கண்ணன்
துவாரகையில் சத்சங்கம் ஏற்பாடு செய்தார்.
மேலும் தேவகியும் யசோதையும் சந்தித்தது கிடையாதாம்
ருக்மிணி த்ரௌபதி,
ருக்மிணி ராதை,
நந்தகோபர் குந்திதேவி இவர்கள் அனைவரையும் சந்திக்க செய்ய 30 நாட்கள் சத்சங்கம் நடத்தினார் பகவான்.
கோகுலத்தில் உள்ள கோபியர்கள்
கையில் வெண்ணையுடன் வருகிறார்கள். அவர்களுக்கு மன்னனுக்கு கையில் வெண்ணையை கொண்டு செல்கிறோம் என்ற அறிவெல்லாம் இல்லையாம் அவர்களுக்கு எல்லாம் கிருஷ்ணன்
"அறிவொன்றும் இல்லா ஆய்குலம்" கிருஷ்ணரை தவிர அவர்களுக்கு வேறு ஏதும் தெரியாது
என்பதை ஆண்டாள் தாயார் இப்படி உறைத்தார்.
நந்த கோபன் வருகிறார் அரண்மனை
வாசலில் நின்று நிமிர்ந்து பார்க்கிறார்
கருடகொடி பறக்கும் கோட்டையை
அதற்குள் தந்தையின் வருகை அறிந்த கிருஷ்ணன் தானே அழைக்க ஓடிவருவதை கண்டு கண்ணீரோடு கட்டி அனைத்து கொள்கிறார்.
ராதையின் வருகை கண்டு கண்ணன் தானே அழைக்க ஓட அஷ்ட மஹிசிகளும் பின்தொடர கிருஷ்ணனையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ராதையை கண்டதும் அனைவருமே
கண்ணீருடன் வரவேற்றார்களாம்.

ருக்மிணி தேவி ராதையை நீ எங்களுடனே இருந்து விடு என்றாராம் துவாரகையில் கிருஷ்ணர் ஏற்பாடு செய்த சத்சங்கத்தில் !

அதற்கு ராதை: நான் பார்க்கும் கண்ணன் துவாரகை மன்னன் அல்ல கோபியர் மனம் கவரும் கள்ளனாகவும் வெண்ணைபானையை உடைத்து குறும்பு செய்யும் கண்ணனாகவே பார்த்து இருக்கிறேன் .
ருக்மிணி தேவியே உங்களுடன் இருக்கும் போதும் கண்ணன் என்னை பற்றியே எண்ணுவார் என்றீரே இது போதும் எனக்கு நான் விருந்தாவன் சென்று இங்கு தானே விளையாடினோம் இங்கு தானே கோபித்து கொண்டோம் என்று இங்குதானே ராஸக்கிரீடை நடத்தினான் என்ற நினைவுகளுடன் அங்கே வாழ்ந்து விடுகிறேன் என்றும் தன்னைசெல்ல அனுமதியுங்கள் என்றாளாம்.
கிருஷ்ணன் தன் 10 வயதில் ராதையை பிரிந்து வந்தவன்
100 வயதில் தான் மீண்டும் சந்திக்கிறார்.
ராதையை பிரிகையில் அலிங்கனம் செய்து கண்ணீருடன் விடை தருகிறார்.
😭😭😭😰😰😨😨 பாகவத உபன்யாசம் Sri Sri ப்ரேமி அண்ணா சொல்ல கண்ணீர் வர கேட்டது.

எழுதியவர் : பந்தார்விரலி (7-Sep-16, 9:00 am)
சேர்த்தது : பந்தார்விரலி
பார்வை : 185

சிறந்த கட்டுரைகள்

மேலே