NH 70

வேகமாக காரோட்டியதற்காக பெரியவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

" அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"

" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."

" யோவ்... அது NH 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..பெரியவர்ஙதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"

" கொஞ்சம் முன்னாலே NH 140 லே வந்தேன்... அதான்..!"

எழுதியவர் : செல்வமணி (7-Sep-16, 12:32 pm)
பார்வை : 185

மேலே