தொண்டுசெய்து போற்றிடுவாய் நீ - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

தரமான நற்சேவை; தேவையுள்ள வர்க்கு
தரவேண்டும் ஈஸ்வரன் போல - இராமலிங்கம்;
கண்ணெனவே டாக்டர் நயினாரின் நற்பெயரை
தொண்டுசெய்து போற்றிடுவாய் நீ! 1

தரமான நற்சேவை; தேவையுள்ள வர்க்கு
தரவேண்டும் ஈஸ்வரன் போல - இராமலிங்கம்;
அன்னையாம் பால உமையின் மறுபெயராள்
என்றும் துலங்க இனிது! 2

கண் டாக்டர். பாலபார்வதி - பால - உமையின் மறுபெயராள்

தரமான நற்சேவை; தேவையுள்ள வர்க்கு
தரவேண்டும் ஈஸ்வரன் போல - இராமலிங்கம்;
தொண்டுசெய்து டாக்டர் நயினாரின் நற்பெயரை
கண்ணெனவே போற்றிடுவாய் நீ! 3

கொள்ளுத்தாத் தாநயினார் கொண்டநற் பேரோடு,
வெள்ளைமன தாத்தா இராமலிங்கம் - உள்ளநிறை
சித்த மருத்துவராம் உன்தந்தை சித்திரன்
உத்தம ஆசியுடன் ஓங்கு! 4

தரமான நற்சேவை; தேவையுள்ள வர்க்கு
தரவேண்டும் ஈஸ்வரன் போல - இராமலிங்கம்;
தொண்டுசெய்து டாக்டர் நயினாரின் நற்பெயரை
கண்ணெனவே காத்திடுவாய் நீ! 5

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-16, 12:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 109

மேலே