விடியலை தேடி
விடியலை தேடி
விடியாத காலை சேவல் கூவியென்ன
இருள் விலகாத வாழ்க்கையிலே
பகலவன் தன் உதயத்தை பரிசளித்தென்ன
அவள் வாழ்வின் துயரங்கள் தான்
விலகி சென்றிடுமா.....
கரு மேகங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலே
அவள் நிஜங்கள் மறைந்தது நிழலாகவே
புது உலகம் காண அவள் விழி திறக்கையிலே
கரு உருவமொன்று அவள் வாழ்வை
இருளாய் மூடியதே....
சிதைக்கப்பட்ட பெண்மையவளும்
சிதறிப்போய் கிடக்கிறாளே
சிதைந்த அவள் உள்ளமதுவும்
பறிக்கப்பட்ட அவள் கற்பதுவும்
மீண்டு தான் வந்திடுமா....
விடியாத அவள் இரவுகளும் முடியாமல் செல்கிறதே
திறக்கப்படாத இருட்டறையினுள்ளே அவளும்
காத்துக்கிடக்கிறாளே
சிறகிருந்தும் கூண்டுக்கிளியாய்
விடியலை தேடியே அவள் வாழ்வும்...