பல விகற்ப இன்னிசை வெண்பா கிளிகள் பிடிக்கவோர் வேடன்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கிளிகள் பிடிக்கவோர் வேடன் நுழையவும்
காட்டிலோர் வேங்கையவன் கண்ணில் படவே
ஒருமரத்தின் மேலேறக் கண்டான் கிளையில்
படுத்திருந்த தோர்கர டி
பசித்திரு வேங்கை கரடியைக் கண்டு
மரத்திரு வேடனை தள்ளிடச் சொல்ல
அடைக்கலம டைந்தார் பழிக்கும் செயலெதும்
செய்கலேனெ னக்கர டி
தன்னுயிர் காக்க நினைத்திரு வேடன்
கரடி இருந்த கிளையை உலுக்க
நிலத்தில் குதித்த கரடியைப் பின்னால்
துரத்தியே சென்றதுவேங் கை
மண்ணுயிர் காப்பான் கடவுள் ஒருவனே
தன்னுயிர் காக்க மனிதன் விழைவான்
இடுக்கண் வருங்கால் நிலைகுலை யாமல்
செயல்படு வார்அறி ஞன்