காப்பாளே எங்களன்னை தாய்காமாட் சி - நேரிசை வெண்பாக்கள்

காப்பாளே எங்களன்னை காஞ்சியிலே வீற்றிருந்தே
யாப்புநான் செய்துனைப் போற்றிடுவேன் - காப்பெனவே
பற்றுவேன்; உன்கருணை எந்தனுக்கு நல்கிடுவாய்
கற்பமென தாய்காமாட் சி! 1

சூடாமணி நிகண்டு:

கற்பம்: பிரமன் வாழ்நாள், கற்பக விருட்சம், தேவலோகம்

உணவு முறையில் எதிர்மறைத் தாக்கம்
குணமிழந்து துன்பங்கள் கோடி – பிணிகளும்
நம்மையே நாடிவர நாளுந்தான் போராட்டம்!
அம்மம்மா! குப்பைவேண் டாம்! 2

அடேபையா! கற்றோ ரவையில் களித்தே
படீரென்று சொல்லாடல் வேண்டாம் – மடீரென்று
காண்டெடுத்து கன்னத்தில் போட்டிடுவார்; எச்சரிக்கை!
வேண்டா மதனால் குசும்பு! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-16, 10:42 am)
பார்வை : 63

மேலே