சுகமான ராகங்கள்

பசியின்றி உணவு கிடைக்க‌
உடுத்திக்கொள்ள உடைகள் கிடைக்க‌
ஓய்வெடுக்க வீடு கிடைக்க‌
நிம்மதியாய் வாழ்க்கை இருக்க..
அழகாய் பிறக்கும் சுகமான ராகங்கள்..

எல்லோருக்கும் நீதி கிடைக்க‌
அன்பு மட்டும் பெருகிவிட‌
வம்பு செய்வோர் மறுகிவிட‌
துன்பம் தூர விலகிவிட‌
இன்பமாய் பிறக்கும் சுகமான ராகங்கள்..

நேர்மை அரசியல் நிறைந்திருக்க‌
ஊழல் முகமெலாம் குறைந்திருக்க‌
சட்டம் சட்டப்படி நடக்க‌
குற்றம் செய்வோர் முடக்கப்பட‌
செவியெங்கும் இசைக்கும் சுகமான ராகங்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-16, 7:24 am)
Tanglish : sugamaana ragangal
பார்வை : 130

மேலே