தினம் ஒரு தத்துவ பாட்டு - 39 = 220

“பேர்சொல்ல ஒர்பிள்ளை நானென் வீட்டில் - என்
பெருமைகள் மறையுது வறுமையெனும் கோட்டில்
எனக்கமைந்த சொந்தங்கள் கொட்டுகின்ற விட்டில்
தண்டச்சோறு என்று திட்டி கொட்டுகின்றது தட்டில்

படியென்றுச் சொன்னார்கள் படிப்பு ஏறவில்லை
பத்தாம் வகுப்பு பரீட்சையில் நான் தேறவில்லை
கூட்டாளிகள் எனக்காக கொடி பிடிக்கவிலை
காட்டாச்சி தர்பாரில் கேள்விக்கு இடமில்லை..

யாரென் வாழ்வில் ஒளியேற்றுவாரோ…? அந்த
மாறனை நான் காணும் நாளென்று வருமோ…?”
ஊருக்கு நூறு என்போன்ற பேரு –
‘பார்’-களுக்கு போனால்தான் நிம்மதி பாரு..!

சொந்தங்கள் இருந்தென்ன எனக்கென்ன இலாபம்
சோம்பேறிக்கு சோறெதற்கு சொல்லாலே கொல்லும்
அர்த்தங்கள் ஆயிரம் ஒருவர் வாழ்க்கையில் இருக்கும்
அபத்தங்கள் இல்லாமல் வாழ்க்கை எங்ஙனம் ஜெயிக்கும்

திரிகள் எரிந்தால்தான் தீபத்திற்குப் பெருமை
வலிகள் குறைந்தால்தான் மேனிக்கு வளமை
இளமையை கடக்காமல் எங்ஙனம் முதுமை
முதுமை அடைந்தாலே முகம்சுளிக்கும் இளமை

வேலையென்பது அவரவர் திறமையை பொறுத்தது
ஊதியம்யென்பது அவரவர் வேலையை பொறுத்தது
நாளையென்பது பொழுது விடிவதை பொறுத்தது
பொழுது போவது செய்யும் பணியை பொறுத்தது

டிகிரி படித்திருந்தால் கொம்பா முளைத்துவிடும்
கைரேகை பதிப்பதால் வம்பா துளைத்துவிடும்
சிரிப்பை உதிர்த்தால் மவுசா குறைந்துவிடும்
எதிரி எதிர்ப்பதால் தீர்ப்பா சிதைந்துவிடும்

கஷ்ட்டங்களை சொல்லியழ இஷ்ட்ட தெய்வங்கள் இருக்கு
இஷ்ட்ட தெய்வமே கஷ்ட்டப்பட்டால் யாரிடம் சொல்லியழும்?
நஷ்ட்டமும் கஷ்ட்டமும் வாழ்க்கையில் சகஜம் – அதை
இஷ்ட்டப்பட்டு ஏற்பவனின் வாழ்க்கையில் வெற்றி நிஜம்.

எழுதியவர் : சாய்மாறன் (11-Sep-16, 9:06 pm)
பார்வை : 138
மேலே