காத்து-ன்னா பேரு வைக்கறது

டேய் பக்கத்தூட்டுக்கு வந்த ஒறவுக்காரப் பையா, இங்க வாடா செல்லம். உம் பேரென்ன? எந்த ஊரிலிருந்து வந்திருக்கற?
@@@####
பாட்டிம்மா எம் பேரு அணில். நா ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து என்னோட அத்தை வீட்டுக்கு வந்திருக்கறென் பாட்டிம்மா.
@@@@####
உங்க ஊருப் பேரு சிரிமுசுட்டனமா. என்னடா செல்லம் உங்க ஊருப் பேரும் வித்தியாசமா இருக்குது உம் பேரும் வித்தியாசமா இருக்குது. அந்தப் பேரு ரண்டுக்கும் அர்த்தம் சொல்லுடா?
@#####
எங்க ஊருப் பேருக்கு என்ன அர்த்தமுன்னு தெரியாதுங்க பாட்டிம்மா. அணில் - ன்னா காற்றுன்னு அர்த்தம் பாட்டிம்மா.
எஙுக அம்மா அப்பா சினிமா ரசிகர்கள். இந்திப் படங்கள வெறித்தனமாப் பாப்பாங்க. அணில் கபூர்-ன்னு ஒரு இந்தி நடிகர் இருக்கறாராம். அந்த அணில்ங்கற பேர எனக்கு வச்சிட்டாங்க. பள்ளிலே நெறைய மரங்கள் இருக்குது. அந்த மரங்கள்ல அணில ஓடறத பாக்கற மத்த பசங்கெல்லாம் "அதோ பாருடா அணில் மரத்துமேல ஓடறான்னு கிண்டல் பண்ணறாங்க பாட்டிம்மா.
@######
செல்லம் உனக்கு காத்து-ன்னு பேரு வச்சதுக்குப் பதிலா தென்றல்-ன்னு பேரு வச்சிருக்கலாம். உங்க அம்மா அப்பாகிட்ட நாஞ் சொன்னதை ஒடனே சொல்லுடா தென்றல் செலலம்.

@##%%%
சரிங்க பாட்டிம்மா.

@####%%###
சிரிக்க அல்ல; சிந்திக்க. மொழிப் பற்றை வளரக்க.

எழுதியவர் : மலர் (12-Sep-16, 1:20 am)
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே