தாய்நாடும் தெய்வமே தான் - இரு விகற்ப நேரிசை வெண்பா - அமுதசுரபி 2016 ஆகஸ்ட் மாத வெண்பாப் போட்டி

தெளிந்த நினைவும் திறந்த மனமும்
கிளையினைத் தாங்குகின்ற கீர்த்தி – உளமுடன்
சேய்போன்ற நல்லிதய சிந்தையும் உள்ளவரை
தாய்நாடும் தெய்வமே தான்! 1

எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சமும்
திண்ணமாய்ச் சொல்லுவேன் தேர்ந்தேநான் – விண்ணுலகில்
வாய்மையது வே!இறைவன் வாழ்கின்ற இத்துணைய
தாய்நாடும் தெய்வமே தான்! 2

நன்றி நிறைந்தவர் நன்மை புரிந்தவர்
என்றும் மகிழ்ந்திட, ஏனைய – நன்றியும்
வாய்மையும் நெஞ்சினில் வைத்தவர் வாழ்ந்திடும்
தாய்நாடும் தெய்வமே தான்! 3

மூன்று பாடல்களும் தனித்தனி அஞ்சலட்டையில் அனுப்பியிருந்தேன்; முதல் பாடல் வெளியாகி இருந்தது.

குறிப்பு: மேலேயுள்ள மூன்று பாடல்களின் முதலடியும் ஒரு பிரபல திரைப்படப் பாடலிலிருந்து மேற்கோளாக எடுக்கப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-16, 6:59 pm)
பார்வை : 91

மேலே