இயற்கை பாதுகாப்பு - பாடல்

மெட்டு : 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே'- ஆட்டோகிராப்.

ஒவ்வொரு மனிதனுமே தன் வாழ்வில்
இயற்கை தான் உயிரென்று அறிவோமே!
ஒவ்வொரு நொடிகளுமே உயிர் வாழ
இயற்கை தான் சகமென்று சொல்வேனே!

ஆக்ஸிஜன் நமக்கு வேண்டும்
உயிர் வாழ. ...........
இயற்கை நாளும் தருமே
நாம் வாழ. ...............

மனிதா! ஓ மனிதா! நீ மாறி விடு
இயற்கை அது தேவை நீ பேணி விடு.

( ஒவ்வொரு)

மரத்தை நீயும் ஒருபோதும்
வெட்டி வீழ்த்தக் கூடாது.
வெட்டி விட்டு நாளை நீயும்
மழையைத் தேடக் கூடாது.

என்ன வளம் நம்நாட்டில்
இல்லை என்று சொல்லுங்கள்
காக்காவிட்டால் காலப்போக்கில்
கரைந்து போகும் கேளுங்கள்.

வழிந்தோடும் நதிகள் தானே
கடலோடு சங்கமிக்கும்
வளம் காணும் நாடு நாளும்
வான் போல உயர்ந்திருக்கும்.

காடும் மழையும் நீரோட்டம்
காலம் முழுக்க சீராட்டும்.

நாம் மனது வைத்தால்
அதை தினம் நினைத்தால்
இந்த நாடே வளமாகும்.

மனிதா ! ஓ மனிதா! நீ மாறி விடு
இயற்கை அது தேவை நீ பேணி விடு.

( ஒவ்வொரு)

உலகை நாளும் நேசிப்போம்
கொஞ்சம் நாமும் யோசிப்போம்
இயற்கை என்ற ஒன்றை காற்றாய்
நாளும் நாமும் சுவாசிப்போம்.

கனிம வளங்கள் மண்ணோடு
காக்கும் கரங்கள் உன்னோடு
உணர்ந்து நீயும் வாழ்ந்து பாரு
உயர்ந்து நிற்கும் நம்நாடு.

மனிதா! உன் மனதில் நீயும்
வைராக்கியம் கொண்டெழுந்தால்
ஆகாயம் நீர்நிலை யாவும்
எல்லாம் நம் வசமாகும்.

உழவு இன்றி உணவேது
உணர்ந்து நீயும் போராடு.

நாம் ஒன்றிணைந்தால்
பல கை இணைந்தால்
இந்த நாடே வளமாகும்.

மனிதா! ஓ மனிதா! நீ மாறி விடும்
இயற்கை அது தேவை நீ பேணி விடு.

( ஒவ்வொரு )

எழுதியவர் : தங்கமணிகண்டன் (14-Sep-16, 7:13 pm)
பார்வை : 6079

மேலே