என் காதலி அல்ல மனைவி
அவளை ஈர்நா ஐந்து
திங்கள் காதலித்து விட்டேன்
அதில் பாதி திங்கள்
சண்டை பிடித்து விட்டேன்
ஆனால் நான்கு வினாடிகூட அவளை மறக்க முடியவில்லை
நான்கு நாழிகை கூட
விலக முடியவில்லை
இதுதான் காதலா?
காதல் விட்டுகொடுக்கும்
காதல் பொறுத்துகொள்ளும்
ஆனால் காதல் அதற்க்கும்
ஒரு அளவுகொடுக்கும்
இல்லையெனில் இது களவையோ
நானும் அவளும்
சந்தித்து ஈராறு
திங்கள் ஆகிறதே
காதலும் அல்ல களவும் அல்ல
இது உறவு
அக்னியும் இல்லை
அருந்ததியும் இல்லை
பெட்டியும் இல்லை
மஞ்சள் கயிற்றில் கோர்த்த
தாலியும் இல்லாமல்
கணவன் மனைவி ஆனோம்
சமூகத்தினருக்கு உள் அல்ல
எங்கள் உள்ளத்திற்க்குள்...