உன் நினைவோடு தான்
உன் நினைவோடு தான்.....
==========================================ருத்ரா
இந்த அகல கடலும் வானமும்
நிலமும் மலரும்
தூரிகை கொண்டு எழுதிய
ஓவியமாய்
தூரத்தே தொலைந்து போகலாம்.
சுற்றிச் சுற்றிவரும் மனிதர்களும்
கார்ட்டூன் எலும்பு உருவங்களாய்
ஒரு நாள்
காணாமலேயே போய்விடலாம்.
குடும்ப உறவுகள் எல்லாம்
பொருளாதார சில்லரைசத்தங்களில்
தேய்ந்து
மறைந்தே போய்விடலாம்.
அன்பே
உன் ஒரு சொல் போதும்.
உன் ஒரு பார்வை போதும்.
உன் இதயத்துடிப்புள் கேட்கும்
என் இதய ஒலியின்
கீற்றின் பிஞ்சுகள் போதும்.
உன் நினைவோடு தான்
இந்த பிரபஞ்சத்தையே
தாங்கி நிற்கிறேன்
அந்த "அட்லஸ்" போல
உன் நினைப்பின்
ஆயிரம் ஆயிரம் உலகங்கள்
தாங்கி நிற்கின்றேன்
உன் விழியோரமே
என் வழிகள் போகும்!
============================================