ஏய் பெண்ணே

ஏய் பெண்ணே:
ஏய் பெண்ணே...பெண்ணே...
உன்னை நினைத்தேன் என் கண் முன்னே
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் மரணித்தேன் பெண்ணே
காலங்கள் கடந்தேன் உன் கண் விழி ஓரம்
பேசும் மொழிகள் புதிதாய் இருந்தது
புன்னகைத்தேன் பெண்ணே
பூக்களைப் போல் புன்னகைக்கும்
பூ இதழ் கெண்ட பெண்ணே
புருவத்தை கொண்டு புதைய வைக்கதே பெண்ணே
உன் காதனிகள் கலையில் நடனம் புரிந்ததோ
என் கண் விழிகள் கரைந்தது கண் இமைக்கும் நொடிகளில்
நீ கை விரல் கொண்டு கேதும் கருநிறை
ஆடை கவி பேசும் அழகு
அணிகள் அணியாத சங்கு போன்ற கழுத்தழகு
வலைவுகளில் நடனம் புரியும் இடை அழகு
நான் தொடர்ந்தேன் உன்னுடன் பழக
மெல்லிசை பாடும் மென்மையான
பாதம் கெண்ட பெண்ணே
நீ நடக்கும் ஒவ்வொரு அடியும்
பின் தொடர்ந்தேன் உயிர்மடியே

எழுதியவர் : சண்முகவேல் (17-Sep-16, 6:56 am)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : EI penne
பார்வை : 476

மேலே