காதல் தடை

அவள்

அடைமழையில்
நனையாத குடையா
குடைமழையில்
நனையாத உடையா

பாதம் மண்மீது
தீண்டாத நடையா
போரில் மண்மீது
சாயாத படையா

பூக்களை
ஏந்தாத ஜடையா
ஈக்களை
பாராத கடையா

நிலவில்
சுட்ட வடையா
ஐஸ்வர்யாவின்
அளவு எடையா

வலக்கரம்
தெரியாத கொடையா
அவளை நான்
காதலிக்க
நிற்காதீர் யாரும் தடையா

எழுதியவர் : குமார் (17-Sep-16, 5:36 pm)
Tanglish : kaadhal thadai
பார்வை : 436

மேலே