சோதனை எந்த எந்த ரூபத்துல எல்லாம் வருது

ஒரு விடுமுறை நாள் மதியம் நான் ஹால்ல உக்காந்து டிவி பாத்துக்கிட்டு இருக்கும் போது என் பொண்ணு தூங்கி எழுந்திருச்சு நேரா கிச்சன்குள்ள போய்..............

"அப்பா கேக்குதா..........."

"நல்லா கேக்குது குட்டிமா.............என்ன வேணும் சொல்லு?"

"அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கேக்குதா............."

நானும் டிவி வால்யூமை கொஞ்சம் குறைச்சுட்டு

"நல்லா கேக்குது தங்கம்..........என்ன வேணும்டா குட்டிமாக்கு..........."

என் பொண்ணு பெருசா அழ ஆரம்பிச்சுட்டா...........இது என்னடா வம்பா போச்சுனு நான் அவளை சமாதானப்படுத்தறதுக்குள்ள என் மனைவி குழந்தையோட அழுகைச் சத்தம் கேட்டு வெளியில இருந்து வந்து என்ன ஆச்சுனு கேக்க, நானும் நடந்ததைச் சொல்ல, அதுக்கு அவ..........

" அவ அங்க நின்னுகிட்டு பிரசங்கமா பண்ணப் போறா?......அவ சாப்பிடறதுக்கு 'கேக்' கேட்டா, அது இவருக்கு நல்லா கேக்குதாம்..........அவளைக் கூட சமாளிக்கலாம் போல.........உங்களை வச்சுகிட்டு நான் எப்படித்தான் குப்பை கொட்டப் போறேனோ தெரியல.........."

"ஙே ஙே ஙே ஙே........"

(ஒரு மனுஷனுக்கு சோதனை எந்த எந்த ரூபத்துல எல்லாம் வருது. இப்படி சிரிச்சுதான் மழுப்ப வேண்டி இருக்கு........)

எழுதியவர் : செல்வமணி (17-Sep-16, 10:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 234

மேலே