விடியல்

கல்லெறிந்த பூக்குளம் போல்
போராடும் போர்க்களத்தில்
முடிசூடப் பிறந்த கோமகனே கலங்காதே...

நம்பிக்கை தீபம் பற்றி எறிய..
நம் தாய்மண்ணில்
தடம் பதித்த கயவர்
கூட்டத்தைக் கருவறுக்க..

யுத்தத்தில் இரத்தம்
தெறிக்கும் சத்தம் கேட்டு
அவன் சப்தநாடிகளும் நடுநடுங்க..

உன் எதிர்நிற்கும் எதிரிப்படை
தொடைநடுங்கி தொலைதூரம் பயந்தோட..

வானவெடி போல
வீரநடைப் போட்டு
உன் விழியாலே வாள் வீசு...

உன் பார்வை
அனல் பட்டே பாவி குலம் மொத்தம்
தறிகெட்டு தலைத்தெறித்து ஓடிடுமே
தலைமகனே கலங்காதே...

விழிநீர் துடைத்து செந்நீர் குடிக்க மலையென
எழுந்து நீ புறப்படு..

நீ சிந்திய உதிரம் பட்டு நம் மண்ணில்
நாளை அரும்பட்டும் புது விடியல் எனும் மொட்டு..

ச.சதீஷ்குமார் அமுதவேணி

எழுதியவர் : (17-Sep-16, 11:44 pm)
Tanglish : vidiyal
பார்வை : 94

மேலே