கன்னிப்பூ

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ என்று தெரிந்தும்
பருவத்தின் ஆசையில் பெற்றோரின் கவலையில்
கூந்தலில் சூடிக்கொண்டேன்...

வருட முடிவில் வாசம் வீசி வளரும் அந்த பூவுக்கு தெரியவில்லை
மாத முடிவில் வாடிப்போவதால் அடுத்த வருடம் வரை வாசமிழந்து
கூந்தல் கைம்பெண்ணாகிறதென்பது...

கூந்தலில் பூச்சோட வருபவர் கோடி
அதில் வருவான் உன் உயிர் நண்பனும் தேடி...

இளமையில் தொலைக்கும் இல்லறம்
மீண்டும் வருமா என்னிடம்...

ஆசைக்கு விளங்கிட்டு விளங்கிட்டு விதவையாகிறது கூந்தல்
அடுத்த வருட மாத முடிவில் வாசம் வீசும் மீண்டுமொரு மாத வாசனையுடன்...

வாடாத பூவாக நீ மாறிட, ஆயுள் முழுதும் கூந்தலில் நான் சூடிட
அந்த நாள் வாராதோ இனியும்தான் விடியதோ....

பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (18-Sep-16, 2:21 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 90

மேலே