கர்ப்பப்பை காக்க அவகேடோ ஹெல்த்டிப்ஸ்

அவகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன. இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.

இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.
#DoctorVikatan #Vikatan
----
தூதுவளை பயன்கள்!

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
----
அருகம்புல் பயன்கள்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும்.

#Vikatan

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (21-Sep-16, 12:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 111

மேலே