அனுசரித்து

#கணவன்; Darling! 2 காபி கொண்டு வாமா!!!
#மனைவி; முடியாது! நீயே போய் போட்டுக்க...
#நண்பர்; ஹம்! இருக்கட்டும் Sir பரவா இல்லை! நான் புறப்படுகிறேன்...
#கணவன்; அட நீங்க Wait பண்னுங்க இதோ வருகிறேன்...
ஏன்டி... ஏன் இப்படி பண்ற!!! வீட்டுக்கு வந்தவங்க...

#மனைவி; வீட்ல ஒன்னும் இல்லை! காபி போடுனா! எதுல போட!!! நீ குடும்பம் பன்றியா! இல்லை அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறாயா!!! நாளை முதல் சம்பளம் பணம் என் கைக்கு வந்தாகணும்! உனக்கு பேட்டா தினமும் 50ரூ நான் தரேன்!!!

கணவன்; பேட்டாவா!!!

மனைவி; ஆமா! 10 தேதி ஆச்சு இன்னும் வீட்ல ஒரு சாமான் இல்லை...
வாங்குற சம்பள காசை எல்லாம் நீயே செலவு பண்ற போல...

கணவ; அடிப் பாவி!!! பேட்டா கொடுக்க நான் என்ன உன் சர்வரா டி!!!

மனைவி; ஹான்!!! ஏன் சொல்லமாட்ட! பொண்ணு பாக்க வந்தப்போ Exqus Me உங்க Phone Numbr. நான் Save பண்ணிக்கவா! என்று கேட்டவன்தானே நீ!!!

கணவன்; அது அப்போ ஏதோ ஒரு...

மனைவி; ஓகோ!!! அப்போ நேற்று Night என்ன சொன்ன! நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன் குட்டி! என் இதய இராணி நீ.... உன் சேவகன் நான்...

கணவ; சரி!!! சொன்னேன்! அதுக்கும் இதுக்கும் என்னம்மா! சம்மந்தம்!!! ஏன்மா! ரெண்டு காபிக்கு இப்படி தேவையில்லாமல் சண்டை போடுகிறாய்!!!

மனைவி; அடப் பாவி!!! நானா உன்கிட்ட சண்டை போடுறேன்....

நீ இப்போ போறியா! இல்ல எல்லாதையும் தூக்கிப் போட்டு உடைக்கவா!!!

கண; Ok Ok Ok... நான் போறேன்... கோபம் போனப் பிறகு சொல்லி அனுப்பு...

(சோகமாக முகத்தை மாற்றிக்கொண்டு நண்பர் அருகில் வந்து அமர்கிறார்.)

நண்பர்; இதுக்குதான் Sir! நான் இன்னும் கல்யாணம் பன்னிக்காமயே இருக்கேன்!!!

உங்கள போல Husbandக்கு ஒரு சல்யூட் கண்டிப்பா அடிக்கனும் Sir!!
Pha... என்னா! Sound!!! என்னால கேட்கவே முடியல Sir...

கணவன்; Hallo Mind Ur Words... அவங்க என் மனைவி...
நண்பர்; Ohh Sorry Sir Sorry Sir...

கணவன்; நானே ஒன்னும் சொல்ல இல்லை! நீங்க ஏன் அதையெல்லாம் நினைக்கிறிங்க!!! உங்களுக்கு Marriage இன்னும் ஆகல!!! அதான் இப்படி பேசுறிங்க...

ம்ம்!!! காபி போடுற வாசனை வருதா!!!
நன்பர்; ம்ம்!!! ஆமா!!! Sir!!!

கணவன்; அதான் Sir என் பொண்டாட்டி...
நீங்க போனப் பிறகும் எங்களுக்குள் சண்டை நடக்கும்!

நண்பர்; !!!ம்!!!

கணவன்; Sir! கணவன் மனைவி இருவருமே சண்டையிடுவது அது ஒரு வகை விளையாட்டு Sir. இப்போது அவள் அந்த விளையாட்டை விளையாடுகிறாள்!!! அவ்வளவுதான்!!!!

என்னை விட என் குடும்பத்தில் அதிக அக்கறை உள்ளவள்! விளையாடட்டுமே...

மனைவி; காபி.
கணவன்; Thank U...
மனைவி; Its Ok.

#மனைவியோடுஅனுசரித்துபோகபழகுங்கள்_இரண்டுசொர்க்கத்தைஅனுபவிக்கும்வாய்ப்பைதவறவிடாதீர்கள்

எழுதியவர் : செல்வமணி (22-Sep-16, 9:15 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : anusarithu
பார்வை : 262

மேலே