நேர்மை

நேர்மையானது எதுவென்று கேட்டார்கள் என்னிடம்

நான் கூறினேன்
கண்ணாடி என்று...

கண்ணாடி
எனை பார்த்து சிரித்தது

என்னால் புறத்தை மட்டுமே
பார்க்க(காட்ட) முடியும்...
அகத்தை அல்ல என்று...

**************

ஏன் நேர்மையானவள்
என்று உங்களை சொல்லிக் கொள்ள வில்லை...

எனக்கு பொய் சொல்ல வராது...
தற்பெருமையும் வராது என்றேன்....

என்ன நான் சொன்னது சரிதானே ?????

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 3:47 pm)
Tanglish : nermai
பார்வை : 850
மேலே