தூண்டிலில் சிக்காத மீன்கள்

துள்ளிக் குதித்திடும் பருவம் எனிலும்
பள்ளி சென்றிடவும் வழியிலா ஏழை
அள்ளிச் சாப்பிடவும் உணவிலா சாதி
எள்ளி நகையாடும் எளிமைத் தோற்றம்
கள்ளிச் செடியாக ஒதுக்கிடும் எங்களை
தூரத்தில் இருந்து பார்க்கும் விழிகளுக்கு
தூண்டிலில் சிக்காத மீன்கள் நாங்கள் !

வாழப் பிறந்தும் வாழ்ந்திட வழியின்றி
வீழ்ந்திடும் நிலையில் எங்கள் நிலை !
வசதிகள் இல்லாத பிரிவுகள் நாங்கள்
அசதியே அடையா அன்னக் காவடிகள் !
அருந்திடும் உணவும் மருந்து அளவே
வருந்திடும் உள்ளமும் வற்றாக் கடல்
தூண்டிலில் சிக்காத மீன்கள் நாங்கள் !

தூங்கிடும் சமுதாயம் தூற்றுது எங்களை
தூண்டிடும் அரசியல் துரத்துது எங்களை
தூய்மையிலா அரசின் தூதர்கள் நாங்கள்
தூய்மை நெஞ்சுடன் வாழ்ந்திடும் நங்கள்
தூண்டிலில் சிக்காத மீன்கள் என்றுமே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Sep-16, 10:36 pm)
பார்வை : 296

மேலே