தாலாட்டும் தமிழ்

ஆராரோ ஆரிரரோ... ராராரோ ராரிரரோ...
ஆராரோ ஆரிரரோ... ராராரோ ராரிரரோ...
பாராள வந்தவனே...எம் பாலுல வளந்தவனே..!
சீராள வந்தவனே...சித்த நேரம் நீ தூங்கு...!

தங்கமே தமிழமுதே...தாய் மனசின் பொக்கிசமே...!
சிங்கமே குலக்கொழுந்தே...சீரழகு ராசாவே...!
அங்கமே தங்கமுன்னு தொட்டிலில மறைச்சிருக்கேன்
சங்கமே முச்சங்கமே மறைஞ்சிருந்தே நீ உறங்கு
சிங்கமே வந்தாலும் மறத்தமிழச்சி நானிருக்கேன்
பங்கமே இல்லாம எந்தமிழே நீ தூங்கு...!

முத்தத்துல நீ அழுதா தாலாட்டில் துடைச்சிடுவேன்
சத்தத்துல முழிச்சழுதா எதால நாந்துடைப்பேன்...?
மொத்தத்துல ஏழைங்கதான் இப்போ தமிழாலே ஒசந்திருக்கோம்
சித்தத்துல செந்தமிழா நீயிருக்க உந்தாயிக்கென்ன குறை...?
பக்கத்துல நானிருக்கேன் பூந்தமிழே நீயுறங்கு...
துக்கத்துல நான் அழுதா துடைச்சிடு நீ எழுந்தே...!

ஆராரோ....ஆராரோ...ஆராரோ...ஆராரோ...........

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (23-Sep-16, 6:41 pm)
பார்வை : 849

மேலே