விற்புருவ அற்புதப் பேரெழிலே

வெற்பில் உயர்ந்தது தென்னவன் வான்பொதிகை
கற்பில் உயர்ந்த தமிழ்மகளே-- விற்புருவ
அற்புதப் பேரெழிலே என்கவியின்-- சொற்பொருள்
பொற்கிழி நற்பரி சே .

-----கவின் சாரலன்

இரு தனிச் சொல் ( விற்புருவ சொற்பொருள் ) பெற்று ற கர ஒற்றுச் சொற்களின்
பொலிவினில் நடக்கும் ஒரு விகற்ப நேரிசை வெண்பா .
யாப்பார்வலர்கள் கவனிக்க

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-16, 10:09 am)
பார்வை : 66

மேலே