தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை

ஈரைந்து மாதங்களில் என்னை ஈன்றெடுத்தவளே !
உன் விரல் தீண்டாக் கள்ளி செடி தான் நானா!

மதி கூறும் மதிப்பு கொண்ட தந்தையே!
உந்தன் நிழல் தொடா நெருஞ்சி முள்தான் நானோ!

என்ன பாவம் செய்தேனோ
இதுவரை நினைவில்லை!

அதை சொல்லும் அளவிற்கு
துணைக்கு கூட ஆளில்லை!

அடம் பிடித்து வாங்கி தின்னும் பிள்ளைகளின்
அலட்சிய மீதமே எனக்கு காலை உணவு !

தெரு வாசிகளின் மதி மறந்த கூட்டு வகைகளே
எனக்கு சுவையூட்டும் மதிய விருந்து!

இரவு பொழுதினை நான் கடந்து செல்ல
இல்லையொரு ஈர துணிகூட!

அதனாலயே அடிக்கடி களைத்து மடிக்கிறேன்
வந்து போதும் எச்சில் இலைகளை!

பிறந்த உடன் இருந்திருப்பேன்
கொடும்பாவி இந்நிலை அறிந்திருந்தால் !

நாசியிலே நெல் போட்டு
நாசூக்காய் கொன்றிருக்கலாம்!

உமியிலே புதைத்து வைத்து
உற்றார் சேர்ந்து மறைந்திருக்கலாம் !

கள்ளி பால் ஊட்டி என்னை
காணாமல் போக செய்திருக்கலாம் !

எதற்காக தூக்கி எறிந்தாய் என்னை
என்ன துரோகம் இழைத்தேன் தாய் மண்ணே!

இதுவரை போதும் நான் பட்ட துன்பங்கள்
இனிமேலும் வேண்டாம் என்போன்ற பாரங்கள்!

இவ்வுடல் அழுக்கென்று இன்னுயிரை
மாய்த்து கொள்கிறேன் இப்பொழுதே!

விடை பெறுகிறேன் உலகை விட்டு
முன் செல்ல வழி ஒன்று கிடைக்காமல் !

சுகமாய் வாழட்டும் என்னை சுமந்தவள்
நலமோடு வாழட்டும் நன்றி செய்த தகப்பன்!

என்னை மறந்து இயல்பாய் நீங்கள்
வாழ்ந்திட எப்பொழுதும் வாழ்த்துகிறேன்!

எழுதியவர் : அனுஷா தேவி (27-Sep-16, 12:37 pm)
பார்வை : 112

மேலே