குறைந்தளவு செத்து மடியலாம் -சந்தோஷ்

இப்போதெல்லாம்
நீதிபதிகள்
தத்துவத் தொண்டையிலே
போதிக்கிறார்கள்
நீதியின் வாயிலே
பொத்துகிறார்கள்.

கொஞ்சம்
மதுவை குடிக்கலாம் என்றாவறே
கொஞ்சம்
விஷத்தைதான் ஊற்றிவிட்டார்கள்.

நீதிமன்றம் எங்கும்
சாராய வாசம்...!
நீதிமன்றமே
சாராய மடம்..!

மதுவருந்தி சட்டம் படித்தவர்களிடம்
மதுவிலக்கு கோரி
நியாயம் கேட்டீரே....நியான்மாரே..!
புத்திக்கெட்ட சட்டத்திடம்
புத்திக்கெட்டு கேட்டீரோ...
கத்தியெடுத்து வாருங்கள்
கொஞ்சமாய்...
குத்தி குத்தி விளையாடுவோம்.!

ஆம்... ஆம்...!
ஒரு செ.மீ குத்தினால் போதும்
சட்டப்படி தவறில்லை...!

செத்தாலும்... கேட்காது
இந்திய நீதி.. அது
செத்த கருவாடு...!

வாருங்கள்.. மக்களே..
குடி மக்களே..!
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைந்தளவு
செத்து செத்து மடிவோம் !!

**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (1-Oct-16, 9:52 am)
பார்வை : 84

மேலே