முருகராவுத்தர்

இந்த தொன்மை மிக்க தமிழ்ச் சமூகத்தில் பிறந்த பிறகு,
முருகனை ஏற்றுக் கொள்வதில் எமக்கு ஒரு தயக்கமும் இல்லை.
முருகன் வழிபாடு என்பது *மூத்தோர் வழிபாடு*

வேட்டை சமூகமாக காடுகளில் திரிந்த நம் மூதாதையர்களின் வழிப்பாட்டு நம்பிக்கையின் வடிவம்தான், முருகன் என்ற வழிபாட்டு அடையாளம்.

என்னுடைய சக தோழனின், என்னுடைய மூதாதையர்களின் ஒரு வழிபாட்டு நம்பிக்கைக்கு நான் முழு மரியாதை செய்கிறேன்.

முருகனைப் பற்றி பாடியுள்ள இலக்கியங்களின் ஓர் இடத்தில் *முருகன் இராவுத்தர்* என்ற சொற்பதமும் பதிவாகியுள்ளது.
தன் தலைவனைப் பாடிய அந்தக் கவிஞன், தன் சமூகத்துடன் உறவாடி மகிழும் *ஓர் இறைக் கொள்கை*-யோடு வாழும் இராவுத்தனையும் இணைத்துக் கொண்டான்.

இப்படித்தான், இந்த
இரு பிரிவு மக்களும் தங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லாமல் கலந்தே வாழ்ந்து வந்தனர்.

அதன் எச்சங்களை இன்றும் நாம் காணலாம்.
தென் தமிழகத்தில் பல கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் பல கொடைகள் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

சமயப் பொறையுடன்,
அவர்கள் தங்கள் சகோதரனின் சமய நம்பிக்கைகளுக்கு உயரிய மரியாதை தந்தனர்.

அதே போன்ற சமயப் பொறை அமையப் பெற்ற என் சகோதர சமயத்தவனும், மாலை நேரத்தில் பள்ளிவாசல் நோக்கி ஓடி வருகிறான். அவன் வீட்டு மழலைகளின் *கண்திருஷ்டி*-க்கு, தொழுகையாளிகளின் சூராவும், ஸலவாத்தும் தான் *தொடு சிகிச்சை*

இதுதான் இந்த திராவிட மண்ணின் வெற்றி.

இந்த வெற்றி பல துறைகளிலும் தொடரத்தான் செய்யும். யாராலும் இதை தடுக்க முடியாது.

சற்று உரக்கப் சொல்வோம் நண்பர்களே !

*வண்ணப்பலகை*

எழுதியவர் : வண்ணபலகை (1-Oct-16, 12:21 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 335

மேலே