வதந்தி

பொன் குலேந்திரன் - கனடா



ரேடியோவில் கலைவாணரின் சிரிப்பு பாடல் போய் கொண்டிருக்கிறது. ஹாலில் சின்னப்பா பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறார். நியூஸ் நாகப்பரென அழைக்கப்படும் ;அவருடய நண்பர் நாகப்பர் வந்து நிற்பதைக் காணாது பேப்பர் வாசிப்பதில் கவனமாக இருக்கிறார். தான் வந்ததைக் காட்ட சின்னப்பர் கவனத்தைக் கவர இருமிக் காட்டுகிறார். அப்போதும் சின்னப்பர் கவனிக்கவில்லை. பாடும் ரேடியோவை நிறுத்திவிட்டு திரும்பவும் இருமிக்காட்டுகிறார். அப்போதும் அவர் கவனிக்கவில்லை. பொறுமையை இழந்த நியூசப்பர் மெதுவாக மேசையில் இருந்த அலாரத்தை அடிக்கச் செய்கிறார். அப்போது துடித்து பதைத்து பேப்பரை கீழே போட்டபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு நாகப்பரைக் கவனிக்கிறார் சின்னப்பர்

“அடடா எங்கடை நியூஸ் நாகப்பரே. என்ன தீடீரென்று இந்த நேரம்.. நான் பேப்பர் வாசிக்கக்கை நித்திரையாய் போனனான். நீர் வந்து நிற்கிறது கூட கவனிக்கவில்லை”

“ஓய் சின்னப்பர். என்னை நியூஸ் நாகப்பர்; என்று கூப்பிடறதை முதலிலை நிப்பாட்டும் எனக்கு எண்டை அப்பர் வைச்ச பெயர் நாகப்பர். இப்படி பட்டப் பெயர் வைத்து கூப்பிடுகிறது எப்பத்தான் உமக்கு மாறுமோ தெரியாது. சின்ன வயதிலை ஊரிலை படிக்கக்கை பழகின பழக்கம் இன்னும் விடவில்லை. இப்படி எண்டால் நான் இனி உமக்கு ஊரிலை நடக்கிற நியூஸ்வந்து சொல்லமாட்டான். நீh கனேடிய சிட்டிசன் என்று அடிக்கடி சொன்னாலும் நான் எப்பவாவது உம்மை சிட்டிசன் சின்னப்பர் எண்டு கூப்பிட்டனானே. அது சரி உதென்ன நாலைந்து பேப்பர் குவிச்சு வைச்சிருக்கிறிர்; எல்லாம் ஓசி பேப்பர்களைத் தானே வாசிக்கிறீர்?, நாகப்பர் கேடட்டார்

“பின்னை நாகப்பர் என்ன காசு கொடுத்து பேப்பர் வாங்கி வாசிக்கிறது எங்கடை தமிழ் கனடா கலாச்சாரம் கிடையாதே. அந்தக் கலாச்சாரத்தை நாங்கள் வளர்க்க வேணும் கண்டீரோ. அந்த ஓசி விஷயம் கிடக்கட்டும் நீர் அடிக்கடி எனக்கு நீயூஸ் வந்து சொல்லுறதாலைத்தான் உந்த தலைப்புப் பெயர் உமக்கு தந்தனான். இப்ப காசு கொடுத்து பலர் கலாநிதி பட்டம் வாங்கினம். அதுக்கும் பார்க்க உது சும்மா கிடைச்ச பட்டம் தானே சும்மா கிடைக்கிற பேப்பர் பட்டம் போல. பட்டப் பெயர் வைத்து கூப்பிடுகிறது பள்ளிக் கூடத்திலை அந்தக் காலத்திலை இருந்து வந்த ஊர்ப்பழக்கம் கண்டீரோ. இப்ப பாரும் நொட்டை நடராசர் , சுத்துமாத்து சுப்பிரமணியம், கட்டை கநதசாமி, சுருட்டுக்கடை சுந்தரலிங்கம் , செல்லடி செல்லப்பர் என்று சொன்னால் தான் அவையளை பலருக்குத் தெரியும். டிரேட் மார்க் மாதிரி அந்தப் பட்ப்பெயர்கள். அந்தகாலத்திலை. அம்பலாங்கொடை அய்யாத்துரை, பலாங்கொடை பாலசிங்கம், பிசின் கந்தையா என்று பெயர்கள் வைச்சது போலத்தான். எங்கடை ஊர் கலாச்சாரத்தைக் கனடா வந்தும் மறக்கக் கூடாது கண்டீரோ”

“கலாச்சாரம் கிடக்கட்டும் நான் இருமிகாட்டியும் நீh கவனிக்கவில்லை. உந்த என் எஸ கேயின்டை சிரிப்பு பாட்டை நான் நிறுத்தியும் அப்பவும் நீh எழும்பவில்லை.. மணிக்கூடடடு அலார்மை அடிக்க வைச்ச பிறகு தான் எதோ விடிஞ்சு போச்சாக்கும் எண்டு பதறி அடிச்சுக் ஏதோ நித்திரயிலை இருந்து எழும்பின மாதிரி பேப்பரை கீழ தாழ்த்தி ஆர் வந்திருக்கிறது என்று பார்க்கிறீர்?. நல்ல ஆள் நீர். வீட்டுக்குள்ளை ;கள்ளன்; கிள்ளன் வந்தாலும் தெரியாமல் இருப்பீர் போல. நான் ஏதோ அவசரம் அவசரமாய், அதுவும் விடுப்பு அறிய விருப்பமான உமக்கு ஒரு சுடச் சடச் நியூசோடை வந்திருக்கிறன். பேப்ரை கூட உது வராத விஷயம் கண்டீரொ. அதை உமக்கு சொல்லிப் போட்டு போனால் தான் எனக்கு இரவைக்கு நித்திரை வரும். ஏதோ பாரத்தை நெஞ்சிலை இருந்து இறக்கின மாதா.” என்றார் சிரித்தபடி நாகப்பர்.

“ இப்ப பேஸ்புக். இமெயில்,; வட்ஸஅப் ,டுவிட்டரில் வருகிற நியூசை விட் உம்முடைய நியூஸ் அப்படிஎன்ன பிரேக்கிங் நியூஸ்?; சுட சுட நியூஸ் என்றால் முதலிலை கோப்பி ஆற முந்திக்கு சொல்லும். அப்பத்தான் கோப்பி குடிக்கிறது மாதிரி இருக்கும் அதுவும் இண்டைக்கு நல்ல நாள் . அட்டமி நவமி கூட இல்லை. எதாவது கலியாண விசயமே. ஆர் மாப்பிள்ளை அல்லது பொம்பிள்ளை”?. சின்னப்பர் கேட்டார்.

“எப்பவும் உமக்கு கலியாணத் தரகர் குணம் தான். இது சுவர்ஷயமான பொம்பிளை விஷயம். உமக்கு எங்கடை சுத்துமாத்து சுப்பற்றை மகளைத் தெரியுமே?“இ கவலையுடன் நாகப்’பர் கேட்டார்.

“உதென்ன கேள்வி?. சுத்துமாத்துக்குப் பேர் போன சுப்பிரமணியத்தை தெரியாமல் இருக்குமே. கன பேருக்கு சுத்து மாத்துக்கு அவர் அட்வைசர். அவற்றை மகள், தன்றை சுவீத்தா என்ற பெயரையும் ஏதோ சுருக்கி சுவீட்டி என்று வைச்சிருக்கிறாளாம் என்று கேள்விப்படட்னான். அந்த சூவீட்டியைப் பற்றிய சூவீட்டான சூடான நியூசே?. சொல்லும் சொல்லும் கேப்பம்.”

“உமக்குச் சின்னப்பர் இளசுகளின்டை கதை எண்டால் போதுமே. இண்டைக்கு எண்டை காரிலை உந்த 403 யிலை நான் வரக்கை மேவிசுக்கு கிட்ட அந்தப் பெடிச்சி ஒரு கறுவலோடை தோளிலை கை போட்டுக்கொண்டு காரிலை போய் கொண்டிருக்கறதை பார்த்தனான். அவையளை ஓவர் டேக் பண்ணி வடிவாக என்ன செய்யினம் எண்டு பாக்கலாம் எண்டால் அந்த இரண்டும் ஹொண்டா ஸ்போர்ட்ஸ் ள காரிலை வேகமாய் காற்றாய் பறந்திட்டுதுகள்;. அவள் நடத்தை ஒரு மாதிரி எண்டு உங்கை மிசிசாகா தமிழ் சனம் ஒரு மாதிரி கதைக்கிறது இப்ப உண்மை போலக் கிடக்கு. பாவம் சுப்பருக்கு மகளின்டை விசயம் தெரியுமோ என்னவோ”? நாகப்பரின் குரலில் கவலை தெரிந்தது.

“உது நல்ல சூடான நியூஸ்;. எங்கடை செல்லடி செல்லற்றை தகப்பன்டை , மாமனடை, மச்சான்டை பெறாமகன் தான் சுத்துமாத்து சுப்பர். அவருக்கும் சுப்பருக்கும்; அவ்வளவு சரியில்ல்லை. உந்த நியூசை மறக்க முந்தி செல்லப்பருக்குச் சொல்லி பத்தவைச்சதால்; அவருக்க வாயுக்கு அவல் கிடைச்ச மாதிரி.”

“ஊரிலை செல்லடிக்கு உயிர் தப்பி வந்த சில்லாலை செல்லப்பரையே சொல்லுறீர். மனுசன் ஒரு மாதிரி. நான் ஆளை கொஞ்சம் தூரத்திலை வச்சிருக்கிறன். கிட்டப் பழகினால் காசு கடன் கேடபபார். முந்தி இரு நூறு டொலர் வாங்கப்போட்டு இன்னும் தராமல் ஒளித்துத் திரிகிறார். சரி சரி நீர் நியூஸ் ஆறமுந்திக்கு உம்முடைய கதையை செல்லடி சுப்பருக்கு டெலிபோனிலை அவித்து விடும்;.. உதுக்குத் தானே லோக்கல கோல் எங்களுக்கு பிரீ யாக பெல் கொம்பனிக் காரன் தந்திருக்கிறான். உம்முடைய மனுசி வரமுந்திக்கு செல்லை ஏவி விடும். இல்லாட்டால் “ ஏன் உங்களுக்கு மணியகார வேலை எண்டு அவவிடம் பேச்சு வாங்குவீர்”. நான் வந்திட்டுப் போனானன் எண்டு மாத்திரம் அவவுக்கு வாய் தடுமாறி சொல்லிப்போடாதையும். அவவுக்கு என்னை பிடிக்காது . நான் அப்ப வாறன”.

“என்ன நாகப்பர் அப்படி அவசரம். கொஞ்சம் இருந்து வேறு ஊர் நியூஸ் இருநதால் கதைச்சிட்டு போமன். உமக்குதான் சிலோன் நெக்டோ எண்டால் விருப்பம். நேத்து தான் ஊரிலை இருந்து வந்தவர் கொண்டு வந்தவர். அதோடை கறுத்த கொழும்பான் மாம்பழமும் கொண்டு வந்தவர். நல்ல மீசாலை மாம்பழம். வெட்டித் தரட்டே. வந்தநீர் பழத்தை சாப்பிட்டிட்டு, நெக்டோலை குடிச்சிட்டுப் போட்டு ஆறுதலாகப் போமன்

“எனக்கு கணக்க வேலை கிடக்கு. வேறு ஏதாவது நியூஸ் கிடைச்சால் கோல் எடுத்து சொல்லுறன். உதைச் சொல்லத்தான் காரைப் ரோட்டிலை பார்க் பண்ணி போட்டு அவசரம் அவசரமாக வந்தனாhன். பிறகு பாhக்கிங் டிக்கட் வைச்சுப்போடுவான். நான் வாறன். நேக்டோ போததைலையும் மாம்பழத்தையும் தாரும். தாரும் வீட்டை கொண்டு போய் உம்முடைய நினைவாய் சுவைத்து பார்க்கிறன்..

******

நாகப்பர் போய் மறைந்தபின்னர் அவசரம் அவசரமாக சின்னப்பர் செல்லப்பருக்கு கோல் எடுக்கிறார். டெலிபோன் அடித்த பிறகு செல்லப்பர் போனை எடுக்கிறார்.

“ ஹலோ சில்லாலை செல்லப்பர் ஹியர். ஆர் உங்கை கதைக்கிறது”?

“ஓய் செல்லப்பர் உமக்கு சிலiலாலை செல்லப்பர் என்ற டைட்டிலை ஐ விட செல்லடி செல்லப்பர் என்ற டைட்டில் தான் நல்ல பொருத்தம்”.

“ஆர் உங்கை பேசுறது. ஒரு புது நம்பர் இங்கை விழுந்திருக்கு. கோலை எடுக்காமல் விடவோ என்று யோசிச்சனான்.

“நான் தான் உம்மோடை யாழ்ப்பாணக் கச்சேரியிலை வேலை செய்த சிட்டிசன் சின்னப்பர். மகன் வீட்டிலை இல்லை. அது தான் ஆசைக்கு செல்போனிலை இருந்து பேசுறன்; அது தான் புது நம்பர் விழுந்திருக்கு. உமக்கு ஒரு விசயம் தெரியுமே?.” சின்னப்பர கேட்டார்

“ஓ சிட்டிசன் சின்னப்பரே?. விசயத்தை சொன்னால் தானே தெரியவரும். சொல்லுமன்.”
உம்முடைய சொந்தக்காரரும் கோபக்காரருமான சுத்துமாத்து சுப்பற்றை மகள் சுவீட்டியை பற்றியது தான்.”

“அப்ப சுவீட்டாகதான் இருக்கும் சொல்லும் சொல்லும் கேப்பம்.”

“அவள் ஆரோ வெள்ளைக்காரனோடை டொயோட்டா கொரொல்லா காரிலை போனதைக் கண்டதாக ஒருவர் எனக்கு சொன்னவர். அதுதான உம்முடைய காதிலை போடலாம் என்ற போன் பண்ணினான்.”

“கனகாலம் எங்கை உம்மிடம் இருந்து கோல் வரயில்லை எண்டு இண்டைக்கு யோசிச்சனான். சரியாய் போச்சு. ஆர் சொன்னது உதை”?

“சொன்னவர் தன்டை பெயரை சொல்லவேண்டாம் எண்டு சத்தியம் வாங்கி போட்டார்.. நான் அவர் பெயரை சொல்ல நீர் அவருக்கு கோல் அடிக்க. பிறகு பிரச்சனை பெரிசாகிடும். மிஸ்டர் எக்ஸ் என்று வையுமேன்.

நல்ல காலம் எண்டை மகனுக்கு அந்தப் பெடிச்சியை பேசி வந்தவையள். சீதனத்தாலை “குழம்பி போச்சு. நாங்கள் மோர்ட்கேஜ் இல்லாத தனி வீடு சீதனமாகக கேட்டனாங்கள். அது முடியாது எண்டு சொல்லி போட்டினம். எண்டை மகன் பெரிய அமெரிக்கன் கொம்பனியில் கொம்பியூட்டர் என்ஞினியர்;. மாதம் இருபதாயிரம் டொலர்களுக்கு மேலை சம்பளம் வேறை. அமெரிக்காவிலை வேலை. சீதனம் கேட்டாதாலை அவர் எண்னோடை பேசுகிறதில்லை”.

“ என்ன சின்னப்பர். புதுமையாக சொல்லுறீர். நான் கேள்விப்பட்டது வேறு கதை. உம்முடைய அப்பர்; முடிச்சது மட்டக்களப்பிலை எண்டு. அதனாலை அவர் சுப்பர் மகளை தரமாட்டான் எண்டிட்டார் எண்டுதான் உங்கை ஊரிலை கதை உலாவுது”.

“உது ஆரோ என்னிலை கோபத்திலை பத்திவைச்ச கதை. இப்ப ஆர் பிரதெசவாதம் கதைக்கிறது?. நாங்கள் எல்லாம் தமிழ் ஈழ மக்கள் கண்டீரோ அது முந்தி தான் ஊரிலை உந்த பாயோடை ஒட்டின கதையும், மந்திரம் போட்ட கதையும். இங்கை கனடாவந்து உதெல்லாம் பேசாவேண்டாம். உதாலை தான் எஙகடை இனத்திணடை ஒற்றுமை சிரழிந்து போகுது”

“சரி சரி ஏன் கோபம் எண்டு சொல்லுமன்”?

“அவரோடை எனக்கு கலியாண விசயத்திலை கொஞ்சம் மனஸ்தாபம். ஆளுக்கு காசு இருக்கிறத என்ற தலைக்கணம். ஆரோ சொல்லிச்சினம் அவருக்கு சுப்பர் செவன் லொட்டரிலை 4 மில்லியன் விழுந்ததாம். ஆள் ஊருக்கு விசயத்தை மறைச்சு போட்டார். இல்லாட்டால் ரிச்மண்ட ஹில்லிலை 4 அறை தனி வீடு வாங்கியிருப்பாரே?. இரண்டு புதுக்கார் வேறை. உந்த நியூஸ் பொதும் அவருடைய கர்வத்தை அடக்க. இப்ப கோல் எடுக்கிறன் கதை காவி கந்தப்பருக்கு. அவரிடம் நான் விடுகிற செல் 24 மணி நேரத்திலை மிசிசாகா முழுவதும் பரவிவிடும்.

“சரி சரி எடுத்து விடும் உமது செல்லடியை. நான் பிறகு பேசுகிறன். எண்டை மனுசி வரப்போறாள். நூன் சொனதை உம்முடைய மனுசிக்க சொலாதையம். பிறகு வெ எணடை மனுசிக்கு சொல்லிப்போடுவா. நான் வைக்கிறன் போனை என்ன”?

******


செல்லப்பர் அவசரம் அவசரமாக தன்னுடைய நண்பர் கதைகாவி கந்தப்பருக்கு கோல் எடுக்கிறார். டெலிபோன் மணி அடிக்கிறது. முகத்திலை சேவிங் கிறீமும் கையிலை ரேசருமாக கந்தப்பர் வந்து போனை எடுக்கிறார்.

“ கான் கந்தப்பர் ஹியர். ஆர்கதைக்கிறது”?

“எனக்குத் தெரியும் ஒரு நியூஸ் சொன்னால்; கான் கந்தப்பரிடம் கொன்னால் மின்னல் வேகத்தில் பரவும் என்று. நான் தான் உம்முடைய ரிப்போர்டர் செல்லடி செல்லப்பர்” பெசுறன்.”

“ஓ ஊரிலை, பஸ்சிலை சில்லாலை ஏறி சில்லாலைக்கு போன செல்லப்பரே? என்ன நியூஸ். கெதியலை சொல்லுமன”;.

“பகிடி விடாதையும். உமக்கு தன்டை மிசிசாகா வீட்டை வாடகைக்கு தர தரமாட்டன் என்ற சுத்து சுப்பருடைய மகளை பற்றித்தான்”.

“ஏன் அவற்றை மகள் யாரோ பெடியனோடை ஓடிப்போட்டாளோ? எனக்குத் தான் உந்த நியூஸ்கள் ஒன்றும் தெரியாதப்பா. நான் ஏனோ தானே என்று 17ம் மாடி அப்பார்ட்மெண்டிலை தானப்பா இருக்கிறன்.”;

“ என்ன கந்தப்பர் 17வது மாடியிலை பேஸ்மெண்டோ?. ஏனக்கு விளங்கயில்லை”

“செல்லப்பா நான் சொல்லவந்தது ஸ்டோர் ரூமை. 17வது மாடியிலை எங்க பேஸ்மெண்ட் இருக்குது?

“தமிழ் பொடியனோடை அவள் ஓடிப் போனால் பறவாயில்லை. ஆரொ சீனாக்காரப் பெடியனோடை கடிலக் காரிலைவேகமாய் போய் டிரபிக் பொலீஸ் பிடிச்சுப் போட்டுதாம். அவளுக்கு டிரைவிங் லைசன்ஸ் இல்லையாம். அதோடை வெறியும் கூடவாம்

“சுப்பரிடம் கடிலக் கார் வச்சிருக்கிற அளவுக்கு வசதியில்லையே?. எனக்கு தெரிந்த மட்டிலை அவர் ஏதோ சின்ன ஹொண்டா சிவிக் காரட தான் வச்சிருக்கிறர் என்று
கேள்விப்ட்டனான்.”, கான் கந்தப்பர் சொன்னார்.

“ஓய் அது சீனக்காரன் பெடியனடை அப்பன்டை கார்காணும். அவர் மார்க்கமிலை பிஸ்னஸ்காரன் காணும். அநத சீனப் பெடியன்டை கேர்ல் பிண்ட் தான் தான சுப்பறறை மகள். அது தான் அவளிடம் ஓடக் குடுத்திருக்கிறான்.”

“ஆர் உமக்குச் சொன்னது உந்தக் கதையை” ?

“சொன்ன ஆளின்டை பேரைக் மட்டும் கேளாதையும். பிறகு அவர் எனக்கு நியூஸ் சொல்லமாட்டார். நம்பினால் நம்பும்”

“சுத்துமாத்துச் சுப்பருக்கு உது நல்ல பாடம். ஆவரிடம் காசு இருக்கிற ஆணவம் இதோடை சரி. நான் உதைப் பற்றி விசாரித்து எனக்கு தெரிந்தவயளுக்கு சொல்லுறன் அப்பத்தான் அவையளும் தங்கடை பிள்ளைகள் மேலை ஒரு கண் வைச்சிருப்பினம். இந்த காலத்திலை பிள்ளையள் மேலை ஒரு கண் வைத்திருக்காட்டால் ஒரு நாளைக்கு தீடிரென்னு வீட்டுக்கு ஒரு பெடியனோடு வந்து வந்து அப்பா மீட் மை போய் பிரண்ட் என்பினம். காலம் மாறி போச்சு செல்லப்பர். முந்தி உப்படி நாட்கள் செய்ய நினைச்சனாங்களே. அப்பர் சாதிப்பார்த்து, சாதகம் பார்த்து, சீதனம் பேசி , அந்தஸ்த்து பார்த்து, பெட்டையிடை நிறம் பார்த்து, படிப்பைப் பார்த்து கலியாணம் ஒழுங்கு செய்துபோட்டு கட்டடா தாலியை எண்டால் கட்டினனாங்கள தானே;. பெட்டையைக் கூட தாலி கட்டக்கை தானே நிமிர்ந்து பார்த்தனாங்கள்.


*******

டெலிபோன் மணி அடிக்கிறது. நாகப்பர் மனைவி அறையில் இருந்துபடி : “ உங்களுக்கு தான் கோல். போய் எடுங்கோ விடிஞ்சதுக்கு பத்து கோல் உங்ளுக்கு வந்திடுச்சு. ஏதோ நியூஸ் பெப்பர் ஒபிஸ் மாதிரி

“ஏன் உனக்கு எனக்கு கோல் வந்தால் எரிச்சலாக இருக்கோ.“? நாகப்பர் போய் டெலிபோனை எடுத்து “ நாகப்பர் ஹியர. “

“ஹலோ நியூஸ் நாகப்பரே?. நான் கான் கந்தபார் பிரம்டனிலை இருந்து கதைக்கிறன்.”

“ஹலோ கான்இ நான் நாகப்பர் தான் Nhசுகிறன்.. என்ன அப்டி விசேஷம் விடிய காத்தாலை கோல் அடிக்கிறீர்”?

“நான ஒரு கதை கேள்விபட்டனான நாகப்பர். இரா முழுவதும் எனக்கு நித்திரையில்லை. .நான் கேள்விப்பட்து உண்மையே?

“எனக்கு தெரியாத கதை ஊரிலை இருக்கே. சொல்லும் கேப்பம்”

“உம்முடைய குடும்பத்தைப் பற்றிதானப்பா”

“எண்டை குடும்பத்தைப் பற்றியோ?. உது ஆரோ கதையை எரிச்சலிலை என் மேலே கதையை கட்டிவிட்டிருப்பினம். அது கிடக்கட்டும் முதலிலை கதையைச் சொல்லுமன்.”

“நான் கேள்விபட்டதை தான் சொல்லுறன். கோவியாதையும். உம்மடைய மகனும் சுத்துமாத்து சுப்பற்றை மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணுனினாம் அதாலை சொல்லாமல் களவாக ஓடிப்போட்டினமாhம். அவை ஓட்டிப்போன பி எம் டபிள்யூ கார் 404 கைNவியலை யிலை ஓடக்கை அக்கிசிடெனட் பட்டுட்டுதாம். உம்முடைய மகனுக்கு நல்ல வெறியாம். பொலீஸ் இரண்டு பேரையும் பிடிச்சுக் கொண்டு போட்டுதாம். நுpசமே அப்பா?

“என்ன விசர் கதை கதைக்கிறீர். எண்டை ஒரே மகன் ஜெர்மனிக்கு தமக்கையிடம் போட்டான். என்னிடம் பி எம் டபிள்யூ கார் வைச்சிருக்கிற அளவுக்கு வசதியில்லை. அது உமக்கு தெரியும் தானே நான் நேத்து சிட்டிசன் சின்னப்பருக்கு சொன்ன வேறை ஒரு கதை, 24 மணித்தியாளத்திலை மூக்கு, காது, வால் வைத்து விசுவரூபம் எடுத்து என்னிடமே திரும்பி வந்திருக்கு. அதுவும் என் குடும்பத்தைப் பற்றி. தன் வினை தன்னைச்சுடும் என்ட கதை போல இருக்கு. அட கடவுளே . உந்த வதந்தி பரவுகிறதை பார்க்கக்கை எனக்கு வாந்திதான் வருகிறது. இனி நான் ஒருத்தருக்கும் நியூஸ் காவமாட்டன். பிறகு ஒரு நாளைக்கு நான் பாக்கியராஜின்டை சின்ன வீடு படம் பார்த்திட்டு வந்ததை ஆரும் கண்டு போட்டு நாகப்பர் சின்ன வீட்டுக்கு போயிட்டுவந்திருக்கிறார் எண்டு எண்டை மனுசிக்கு போன் பண்ணி சொன்னாலும் சொல்லுவினம். பிறகு நான் வீட்டிலை இருந்தபாடில்லை”

“கோவியாதையும நாகப்பர்;. நான் கேள்விபட்டதை தான் உமக்கு சொன்னான். நான் போனை வைக்கிறன். எனக்கு வேலை இருக்கு.”

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் துக்கமடா பாடல் ரேடியோவில் போகிறது.

********

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (3-Oct-16, 5:47 am)
பார்வை : 1732

மேலே