நீ நதிக்கரையில் காத்திருபது யாருக்காகவோ

உன் உதடுகள் செவ்விதழ்ப் பேழை
‍‍‍‍.....குவிந்து கிடப்பது பாண்டிய நாட்டு முத்துக்களோ ?
உன் தளிர்மேனி பிரமன் செதுக்கிய   சிலை  
.....அவன் செதுக்கியது சேர நாட்டுத் தந்தத்திலோ ?
உன் நெஞ்சம் தஞ்சைப் பசும்வயல்
....காதலாய் அங்கே பாய்வது சோழனின் காவிரியோ ?
முத்துக்களும் முத்தமிழும் மூவேந்தர் புகழும்
‍‍‍‍....ஏந்தி நடக்கும் நீ நதிக்கரையில் காத்திருபது யாருக்காகவோ ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (3-Oct-16, 8:18 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 132

மேலே