இரு மனம் முறிவு விழா

கனவுகள் நிறைந்த வாழ்க்கையில்
நிஜமாக நீ நுழைந்தாய்- என் நிழல்
என்னை தழுவ மறந்தாலும் -நீ என்னை
தழுவ மறக்கமாட்டாய் என்றிருந்தேன்
ஒரு சாண் மஞ்சள் கயிற்றால் இணைந்த
வாழ்வு இன்று ஒரு சில துளி மையினால் இட்ட
கையெழுத்தால் தடம் மாறி போனது -
அச்சத்தை தூவி வாழ்த்தியவர்களும் மீண்டும் தயாராகிவிட்டனர்
ஒரு சாண் மஞ்சள் நாணலும் தயாராகிவிட்டது... இறைவா !
அந்த நாணலுக்கு இருக்கின்ற இலகுவான உணர்வு கூட
நம் மனதிற்கு இல்லாம போனது ஏன் ..........-இதற்கு
விடை இருந்தால் நீதிமன்ற வாயிலில் காத்திருப்போர் பட்டியலில்
நம் பெயரும் இடம் பெற்று இருக்காது

எழுதியவர் : prabavathi (3-Oct-16, 11:34 am)
சேர்த்தது : பிரபாவதி
பார்வை : 138

மேலே