எமோஷனல் பயமுறுத்தல்

ஒரு விஷயம் எனக்குப் புரிவதேயில்லை. யார் யார் சார்பிலோ யாராரோ வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

உதாரணத்துக்கு என் பெண் பிறக்க சிறிது கஷ்டம் என்றவுடன் வீட்டுப் பெரிசுகள் ஆளாளுக்கு தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் என் குழந்தைக்கு முடியிறக்குவதாக வேண்டி கொண்டு விட்டனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன் என்னிடம் விஷயத்தைக் கூறி விட்டுக் கடமை முடிந்ததெனச் சென்று விட்டனர்.

ஒவ்வொரு ஊருக்கும் குழந்தை மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு செல்வது என் வேலையாயிற்று.

அதன் பிறகு குழந்தைக்கு என்ன உடம்புக்கு வந்தாலும் இந்த அராஜகம் நடக்கிறது.

நான் கூறுவது இதுதான்.

வேண்டிக் கொள்வதாயிருந்தால் தானே ஏதாவது செய்வதாக இருக்க வேண்டும். தான் கால்நடையாக கோவிலுக்கு வருவதாக, அங்கப் பிரத்ட்சணம் செய்வதாக இத்யாதி, இத்யாதி.

வரும் ஆத்திரத்துக்கு அவ்வாறு வேண்டிக் கொள்பவர்கள் உடம்பு சரியில்லாமல் போனால் அவர்களுக்கு மொட்டைப் போடுவதாகப் பிரார்த்தனை செய்து கொள்ளலாமா என்றுத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எப்போது நிற்கும் இந்த எமோஷனல் பயமுறுத்தல்?

எழுதியவர் : செல்வமணி (4-Oct-16, 10:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 192

மேலே