ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம் பாகம்-15

வினோவுக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவளுக்கு மாணவர்களுக்கு உதவி செய்வது,பொது வேலைகளில் ஈடுபடுதல் என்பவற்றில் ஆர்வம் அதிகம்.

அதனால் தான் அவளை இல்லத்தில் தலைவியாக தெரிவு செய்த போது அவள் அப் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு திறன்பட செய்தாள்.

ஆனால் இன்று அவள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம்.

எதுவுமே புரியாத குழப்பத்தில் இருந்தாள்.

அன்று இரவு சரியாக நேரம் எட்டு மணி. அப்பொழுது அவள் சாப்பாட்டு மணி அடிக்க வேண்டும் என்று எழுந்தாள். அப்பொறுப்பு தற்போது அவளினுடையது இல்லை என்பதை மறந்து.......

எழுந்து நடந்து சென்றவள் திடீரென்று நினைவுக்கு வந்தவளாய் திரும்பி வந்து தனது அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்......

சாப்பாட்டு மணி அடித்தது.

அனைவரும் சென்று சாப்பிட்டனர். சோறும் மீன்கறியும் பயற்றங்காய் கறியும் அவளுக்கு மிகவும் பிடித்த உணவு.ஆனால் அன்று அவளுக்கு உணவு உண்ண விருப்பமற்றவளாய் ஏதோ சாப்பிட வேண்டிய கடமைக்கு சாப்பாட்டாள்.

சாப்பிட்டு முடித்த அனைவரும் படிக்கும் இடத்திற்கு சென்றனர். ஆனால் குட்டியா எனும் மாணவி பொறுப்பாளரின் அறைக்கு சென்றாள்.இதை அவதானித்த வினோ அதைப்பற்றி எதுவுமே சிந்திக்காது படித்து கொண்டிருந்தாள்.

வினோ அப்படித்தான் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடமாட்டாள். ஆனால் அடுத்தவர் செய்வது பிழை என்றால் அதை பிழை என்று அறிவுரை கூறி அவர்களை நற்பிள்ளையாக மாற்றி விடுவாள்.

பொறுப்பாளர் பெண்ணிடம் சென்ற குட்டியா,
"அக்கா நான் உங்கட்ட ஒண்டு சொல்லனும்....."
"என்ன சொல்லு குட்டியா...."

"உங்கட அலுமாரியில இருந்த பணத்தை எடுத்து வினோக்காவின் அலுமாரியில் வைச்சது நிலா அக்காவும் அவங்களோட சேர்ந்து இருப்பாங்களே மற்ற நாலு அக்காக்களும் தான்..."
" என்ன சொல்லுறாம்மா எப்படி உனக்கு தெரியும்....?"

"அக்கா நான் நேற்றிரவு படிச்சிட்டு தூங்க போகும் போது நிலாக்காவும் மற்ற நாலு அக்காக்களும் தான் அலுமாரியில இருந்து பணத்தை எடுத்து கொண்டு போய் வினோக்காட அலுமாரியிக்க வைச்சவங்க......"
"அடக்கடவுளே வேற....?" "அதுக்கு பிறகு அவங்க கதைச்சாங்க வோக்கியையும் அவங்க தான் வினோக்காட அலுமாரியில வைச்சவங்களாம்....."
என்று ஒன்று விடாமல் நடந்த அனைத்தையும் மூச்சு விடாமல் கூறினாள் குட்டியா.

"ஓ...நா தான் வினோவ தப்பா புரிஞ்சு கொண்டன் சரி நான் நாளைக்கு அதப்பற்றி கதைக்குறன் நீ போய் படி.." என்றார் அவள்.
தொடரும்.............

எழுதியவர் : சி.பிருந்தா (5-Oct-16, 12:02 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 104

மேலே