வாழ்க்கைப் படகு
அதோ போகிறது காதல் படகு
காதலர் காதலி பயணிகள் ஏற்றி
காதலன் தான் படகோட்டி
வாழ்க்கை நதியின் அலைகள் மீதே
ஒய்யாரமாய் போகிறது காதல் படகு
இதோ காதலி அவன் மடியில்
தாலாட்டு படுகின்றானோ காதலன்
ஆனந்தமாய் தூங்குகிறாள் நாரி அவள்
நதியில் அமைதி
படகும் ஓடுது அமைதியாய் ஒய்யாரமாய் i
வந்தது வாழ்க்கையில் சுமைகள்
திணறுகிறான் படகோட்டி
ஆட்டம் காணுது படகு
விழித்துக் கொண்டாள் மாது
காதலன் சுமையை இன் முகத்தோடு
பகிர்ந்து கொண்டாள்முறையாக
ஆடிய படகு அமைதி கொண்டது
வாழ்க்கைப் படகு இனிதாய் தொடர்ந்தது
வாழ்க்கையின் சுகம் இருவரின் கையில்
இன்பமும் துன்பமும் இயற்கையாய் வருவன
இவற்றை கண்டு மிரண்டு விடாமல்
இவை வெள்ளமென்று எதிர்கொண்டு
வாழ்க்கை படகை கரை சேர்த்தால்
வாழ்க்கையில் துன்பம் என்றும் இல்லை