விசாலு குசாலு -- உரையாடல் குறுங்கதை

என்னங்க பாட்டிம்மா விசாலு குசாலு-ன்னு சத்தம் போட்டுட்டு இருந்தீங்க? யாரையாவது கிண்டல் பண்ணினீங்களா?
@@@@@
ஏண்டியம்மா இளவரசி, அடுத்தவங்களக் கிண்டல் பண்ணற வயசா எனக்கு? நானே எம் பேரப் பயலுக விசாலு , குசாலு (விஷால், குஷால்) மத்தியானத்தனத்திலிருந்து காணம்ன்னு கத்திக் கத்தி தொணட வறணடு போச்சுடி.
######
அவனுக ரண்டு பேருக்கும் யாரு பேரு வச்சது?
@@@@@@
எம் மவன், மருமவளத் தவற வேற யாரு பேரு வைக்கப் போறாங்க?
####@#
விஷால், குஷால் -ன்னு வச்சிருப்பாங்க பாட்டிம்மா.
@@@@@@
ஆமாண்டி, ஆமாண்டி. நீ சொல்லற மாதிரிதான் அவுங்களுஞ் சொல்லறாங்கடி. பாழாப் போன எம் வாயில அந்த இந்திப் பேருங்க எல்லாம் நொழையமாட்டங்குதே நா என்னடி செய்யறது?
@####
பரால்லீங்க பாட்டிம்மா. உங்களால எப்பிடி சொல்லமுடியுமோ அப்பிடி சொன்னாப் போதும.
############₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிவோம். தமிழ்ப் பற்று இல்லாத் தமிழரும் பிற மாநிலத்தவரும் வட மொழி எனப்படும் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் உள்ள பெரும்பாலான பெயரடைச் சொற்களையும் (Adjectives) வினையடைச் சொற்களையும் (Adverbs) பெயர்ச் சொற்களாகப் (Nouns) பயன்படுத்துகிறார்கள்.
##@@@$$$$$₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
விஷால் = மிகப் பெரிய, தரத்தில் மிக உயர்ந்த, பெருத்த, பரும அளவு மிக்க, மனித உருக்கொண்டு ஆனால் பெரும் பலம் கொண்ட(massive, huge, great, giant)
###
Kushal = clever, திறமையுள்ள
###
நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்காம் &
யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி

எழுதியவர் : மலர் (7-Oct-16, 11:15 pm)
பார்வை : 257

மேலே